விமானத்தை இயக்குவதற்கான அறை காக்பிட் (cockpit) என அழைக்கப்படுகிறது. அதில் இரண்டு கருப்பு பெட்டிகள் பொருத்தப்பட்டிருக்கும். விமானிகள் மற்றும் விமான இயக்கத்தின்போது காக்பிட்டுக்குள் நடைபெறும் உரையாடல்கள் அனைத்தையும் பதிவு செய்து வைக்கும் அமைப்பு கருப்புப் பெட்டி எனப்படும் black boxes. இவை விபத்தின் போது விமானிகளும், விமானப் பணியாளர்களுக்கும் இடையிலான உரையாடல்களை தெரிந்துக் கொள்ள உதவும். அதாவது விபத்திற்கான காரணத்தை தெரிந்துக் கொள்வதற்கு உதவுகிறது black box.
விமானம் விபத்துக்குள்ளான சில மணி நேரங்களிலேயே கருப்புப் பெட்டி எங்கு இருக்கிறது என்பதற்கான சிக்னல்கள் கிடைத்ததாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான விமானம், சனிக்கிழமையன்று ஜகார்த்தாவில் (Jakarta)
இருந்து பொன்டியநாக்கிற்கு சென்றுக் கொண்டிருந்தது. சில நிமிடங்களில்
ரேடாரில் இருந்து காணமல் போனது. சற்று நேரத்தில் விமானம் மாயமான தகவலை
வெளியிட்ட அதிகாரிகள், தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கினர். கடலில் விமானம்
விழுந்து விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என்ற அச்சம் இறுதியில் உண்மையானது.
தலைநகர் ஜகார்த்தா கடற்கரையில் சிலரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
விமானத்தில் இருந்த 62 பேரும் உயிர் தப்பும் வாய்ப்புகள் குறைவு என்று
அஞ்சப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக