வியாழன், 14 ஜனவரி, 2021

மதுரையில் பாதுகாப்பு அதிகாரிகளை பக்கத்தில் வரவிடாமல்.. மக்களுடன் மதிய உணவு சாப்பிட்ட ராகுல்காந்தி

Arsath Kan -  tamil.oneindia.com :மதுரை: மதுரை மாவட்டம் தென்பழஞ்சியில் மக்களோடு மக்களாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
எப்போதும் தன்னை சுற்றி நிற்கும் பாதுகாப்பு அதிகாரிகளை இன்று சற்று தள்ளியே வைத்திருந்தார் ராகுல். இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் மட்டுமின்றி பொதுமக்களும் எளிமையாக ராகுலை சந்திக்க முடிந்த காட்சிகளை மதுரையில் காண முடிந்தது.
ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டு ரசித்த ராகுல்காந்தி... மெய்க்காப்பாளரை தள்ளி நிற்குமாறு அறிவுறுத்தல்..!
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து மதுரை வந்தார் ராகுல். இதையடுத்து சுமார் 45 நிமிடங்கள் ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டு ரசித்த அவர் அதற்கு பிறகு தென் பழஞ்சி என்ற ஊருக்கு சென்றார்.
அங்கு காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பொங்கல் வைக்கும் முறையை கவனித்தார். மக்களுடன் மக்களாக மக்களுடன் மக்களாக பின்னர் அங்கு மக்களுடன் மக்களாக மதிவு உணவு சாப்பிட ராகுல் அமர்ந்தார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த தென்பழஞ்சி கிராம மக்கள் ராகுல்காந்தியுடன் அமர்ந்து ஒன்றாக சாப்பிட போட்டி போட்டனர். இதேபோல் இளைஞர் காங்கிரஸில் உள்ள ஏராளமான இளைஞர்கள் ராகுல்காந்தியுடன் செல்ஃபி எடுக்க விரும்பினர்.
இதனை அறிந்த ராகுல்காந்தி தன்னுடன் செல்ஃபி எடுக்க விரும்பிய இளைஞர்களை அருகில் அழைத்து செல்ஃபி எடுத்துக்கொள்ளுமாறு போஸ் கொடுத்தார். அப்போது ராகுலை சுற்றி கூட்டம் நெருக்கியடித்ததை பார்த்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அவர்களை விலக்க முயன்றார். ஆனால் அதனை தடுத்த ராகுல் இளைஞர்கள் விரும்பியபடி அவர்களுடன் செல்ஃபி எடுத்து பின்னரே அங்கிருந்து புறப்பட்டார்.
ராகுல்காந்தியின் இந்த எளிய அணுகுமுறையை கண்ட பொதுமக்களும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும் இந்தளவுக்கு அவர் எளிமையான மனிதராக இருப்பார் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை என கூறிக்கொண்டனர்.
டெல்லி விமானம் ஏறுவதற்கு முன்னர் மதுரை விமானம் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல், நாட்டுக்கே வழிகாட்டியாக திகழ்கிறார்கள் தமிழக மக்கள் என புகழாரம் சூட்டிச் சென்றார்.


கருத்துகள் இல்லை: