புரட்சித் தலைவிக்கு
"புதுவித பல்டி"....
ட்ரிங்...ட்ரிங்...ஹலோ யார் பேசுறது ?
நா எம்ஜியார் பேசுறேன்...ஜெய்சங்கர் மனைவி இருக்காங்களா?
நான்தான் பேசுறேன்...சொல்லுங்க...
மரியாதையா உன் புருஷன்கிட்ட சொல்லி ஜெயலலிதா கூட நடிக்க வேணான்னு சொல்லீரு...இல்லேண்ணா உயிரோட இருக்க மாட்டான்....
ட்ரிங்...ட்ரிங்...குமுதம் பத்திரிக்கை ஆபீஸா...நா எம்ஜியார் பேசுறேன்...உங்க பத்திரிக்கைல..... ஜெயலலிதா சோபன் பாபு கூட வாழ்ந்த living together பத்தி....ஜெ எழுதுற
"சொல்லத்தான் நினைக்கிறேன் " ங்கிற தொடரை உடனே நிறுத்தணும்..
ட்ரிங்...ட்ரிங்...ஹலோ யார் பேசுறது ?
ஏய் சாந்தினி...நான்தாண்டி உன் School mat ஜெயலலிதா பேசுறேன்...
என்னடி விசயம்...
எம்.ஜி.ஆரை நான் காதலிக்கிறேன்டி... அவரை நான் ஒதுக்கினால்...என்னால் நடிக்கவே முடியாது...அவரது அதிகாரம் அப்படி !
எனவே நேபாளம் சென்று இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போறோம்....
ட்ரிங்...ட்ரிங்...ஹலோ யார் பேசுறது ?
நான்..."பெரியாரின் பேரன் நான்" பேசுறங்க.... எனக்காக நீங்க ஒரு favour பண்ணனும் தோழர்....ஜெ - MGR திருமணம் பத்தி சொல்லுங்க...
‘‘ MGR உடனான உறவை சட்டப்பூர்வமாக்கணும்னு ஜெ ரொம்ப முயற்சி எடுத்தாங்க. ஆனா அது நடக்கல. எம்.ஜி.ஆர் முதல் முறையாக முதல்வரானதும் திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயலலிதா நச்சரிச்சாங்க. கல்யாணம் செய்துக்கல.......
எம்.ஜி.ஆர் கூடக் கொஞ்சம் அரை குறை சம்மதத்திலே இருந்தார். ஆனா, சின்னப்ப தேவர் கடுமையா எச்சரிச்சார்.
"தம்பி எத்தனைப் பெண்களை வேணும்னாலும் வச்சுக்குங்க. ஆனா இரண்டாம் கல்யாணம் செய்துக்கிற தப்பை மாத்திரம் செய்யாதீங்க. செஞ்சீங்க, இந்த ஃபீல்டை விட்டுப் போயிடுங்க" அப்படித்தான் அப்ப கல்யாணம் நடக்காம போச்சு.
எம்.ஜி.ஆர் இரண்டாம் முறையா முதல் அமைச்சர் ஆனதும், 1983லே ஜெயலலிதா மூகாம்பிகையிலே திருமணம் செய்துக்கணும்னு முடிவு செஞ்சாங்க. என்னை கூப்பிட்டு, ‘அண்ணே, நாளைக்கு நாம ஒரு எடத்துக்குப் போறோம். தயார் செஞ்சுகிட்டு வாங்க’ன்னாங்க. சித்த நேரம் பொறுத்து எம்.ஜி.ஆர் என்னை கூப்பிட்டு, ‘நாளைக்கு நா ஊரிலே இருக்கமாட்டேன். அம்முவை கொஞ்சம் சமாளி. போயஸ் கார்டனுக்கு போய் அவளைக் கவனிச்சுக்க’ன்னார். என்ன விஷயம்னு கேட்டேன். ‘அப்புறமா சொல்றேன்’னார்.
நா போயஸ் கார்டனுக்குப் போனேன். ஜெயலலிதா ரொம்ப சந்தோஷமாகத் தெரிஞ்சாங்க. ‘நாம ஒருத்தருக்காகக் காத்திருக்கணும்’னாங்க. நாங்க 12 மணி வரை காத்திருந்தோம். யாரும் வரல.. மூகாம்பிகைக்குப் போயி கல்யாணம் செய்துக்கிற பிளான் இருந்திருக்கனும்னு நா யூகிச்சேன். அது எம்.ஜி.ஆரை தொந்தரவு செய்திருக்கனும்......
ஆனா என்.ஜி.ஆர். ஜானகியோட எங்கேயோ தொடர்பு கொள்ள முடியாத இடத்துக்குக் கிளம்பிபோயிட்டார். எம்.ஜி.ஆர் தன்னை ஏமாத்திட்டார்ன்னு ஜெயலலிதாவுக்கு புரிஞ்ச உடனே அதுக்கு வந்ததே பார்க்கனும் கோபம். கைக்குக் கிடைச்ச, எல்லாத்தையும் எடுத்து விட்டெறிஞ்சுது. சாமானையெல்லாம் எடுத்து உடைச்சுது. கன்னாபின்னான்னு கத்திச்சு. ரொம்ப நேரம் சமாதானமாகலே.
அப்புறமா எம்.ஜி.ஆர் எங்கிட்ட சொன்னார். ‘அம்மு கல்யாணம் செய்துக்கத் தொந்தரவு பண்ணினா. நான் சரின்னேன்’னு.
அதுதான் அவருடைய பலவீனம்....
தன்னுடைய முடிவுகளிலே உறுதியாக இருக்கமாட்டார். ....
ஜெயலலிதாவுடைய உணர்வுகளை சீரியஸாக எடுத்துக் கொள்ளவே இல்லை. அவளை ஏமாத்துற நினைவோ, குத்த உணர்வோ அவருக்கு இருக்கல. பாவம் அந்த பொண்ணு’’ என்று சோலை சொன்னார்.....
இரண்டாவது பல்டி :
"ஏழைப்பங்காளனின்
கோமாளி பல்டி"....
விவசாயி.....தொழிலாளி.....உழைக்கும் கரங்கள்...உரிமைக்குரல்...மீனவநண்பன் என தன்னை ஏழைகளை இரட்சிக்க வந்த தேவதூதனாக மக்களை நம்ப வைத்து....வாரிக் கொடுத்த வள்ளல்...கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரரான மகோரா....
தமிழகத்தின் சுபீட்சத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லி ஏராளமான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்து பெரும்பான்மையான மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளிவிட்டு....... இலவசப் பற்பொடி, செருப்பு, புடவை, பிளாஸ்டிக் குடம், சத்துணவு என்று இவரது தானத்திற்குத் தவம் கிடக்கச் செய்துவிட்டு......
தனது எடுபிடிகளுக்கு அரசுச் சொத்துக்களை தானமாக வாரி வழங்கி பல்டி அடித்தார்.....
சென்னை மிருகக்காட்சி சாலை இருந்த இடத்தை பழனி பெரியசாமிக்கும்..... சென்னை வளசரவாக்கத்தின் புறம்போக்கை நடிகைகள் அம்பிகா-ராதாவுக்கும்...........
போரூர் புறம்போக்கை சாராய உடையாருக்கும், மருவத்தூர் ஏரிப்புறம்போக்கை பங்காருவுக்கும்.........
முனு ஆதி, லியாகத் அலிகான், மா.பொ.சி., அங்கமுத்து, உக்கம் சந்து, பழக்கடை பாண்டியன், கோடம்பாக்கம் குமார், சுலோச்சனா சம்பத், கல்யாணி ராமசாமி, அனகாபுத்தூர் ராமலிங்கம், பால குருவ ரெட்டியார் இப்படி ஒரு பெரிய ஒட்டுண்ணிக் கூட்டத்தை வாரியங்கள்........அரசு நிறுவனங்களின் தலைவர்களாக்கி..... அரசாங்கப் பணத்தைச் சுருட்டிக்கொள்ள ஏற்பாடு செய்தார்......
ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, கோவை முதலாளி வரதராஜுலு போன்ற அரசியல் வாடையே இல்லாதவர்களுக்கும் பதவிகளைத் தானம் செய்தவர் மகோரா.
மூன்றாவது பல்டி :
"குடிகாரன் பேச்சு விடியறக்குள்ளேயே போச்சு பல்டி"
மதுவுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் குழுவில் பொறுப்பிலிருந்த மகோரா..... தி.மு.க-வில் இருந்து வெளியேற கண்டுபிடித்த காரணங்களில் மதுவும் ஒன்று. கணக்கு கேட்டு பேசிய கூட்டத்தில், மதுவைப் பற்றியும் கண்டித்தார். அவரை தி.மு.க-வில் இருந்து விலக்கும் கடிதத்தில் உள்ள காரணங்களில் இதுவும் ஒன்று.....
'பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியபோது அதற்கு ஆதரவாகப் பேசிவிட்டு, இப்போது வெளி மேடைகளில் விமர்சித்துப் பேசுவது கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவதாகும்’ என்றுதான் தி.மு.க-வின் அன்றைய பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் குறிப்பிட்டார்.....
"'என் இறுதி மூச்சு இருக்கும் வரை மதுவிலக்குக் கொள்கையை நான் நிறைவேற்றுவேன் என என்னைப் பெற்ற அன்னை மீது உறுதி எடுத்துக் கொள்கிறேன்’ 2.12.1979 'அண்ணா’ நாளிதழில்........மகோரா....
ஆனால்...
1.5.1981-ல் மகோரா சாராயம் மற்றும் கள்ளுக்கடைகளை மீண்டும் திறந்தார்......
அதுவரை இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் உற்பத்திசெய்கிற தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இல்லை. நான்கு தனி நபர்களுக்கும் கூட்டுறவுத் துறை நிறுவனத்துக்கும் அரசு அனுமதி அளித்து..... சாராயம், கோடிகளைக் கொட்டும் தொழிலாக மாற்றியது மகோராதான்.....
பல்டிகள் பல நூறு உண்டு...மறுப்புகளுக்கேற்ப மறுபடியும் பல்டி அடிக்கப்படும்.........
பதிவிற்கு உதவி :
எழுத்தாளர் வாஸந்தி எழுதிய ’ஜெயலலிதாவின் மனமும் மாயையும்’ ....
பத்திரிகையாளரும், ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக்க இருந்தவருமான சோலை அவர்களின் கட்டுரை.
பெரியாரின் பேரன் நான் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக