இந்திய விமானநிலைய ஆணையம் நடத்திய ஏலப்போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு இயக்கி, பராமரித்து, மேம்படுத்துவதற்காக 50 ஆண்டுகளுக்கு இந்த விமான நிலையங்களை குத்தகைக்கு விடபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதே போன்று, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி, அதானி குழுமம் நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமான மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பெறும் பங்கை பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் கடந்த ஜனவரி 12 அன்று ஒப்புதல் அளித்தது.
அதானி குழுமம் இன்று நாட்டின் மிகப்பெரிய தனியார் விமான நிலைய இயக்கி, பராமரிப்பாளராக உள்ளது; கடந்த 20 மாத காலத்திற்குள், நாட்டில் அதிகப்படியான விமானப் பயணிகள் போக்குவரத்தைப் பராமரிக்கும் இரண்டாவது நிறுவனமாக உயர்ந்திருக்கிறது.
கடந்த நிதியாண்டில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் மும்பை , ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் அகமதாபாத், மங்களூர், லக்னோ ஆகிய ஏழு விமான நிலையங்கள் 7.90 கோடி விமானப் பயணிகளைக் கையாண்டன. 34.10 கோடி உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிகையில், நான்கில் ஒரு பங்கை அதானி குழுமம் கையாண்டு வருகிறது.
இது தவிர, இந்திய அரசின் பிராந்திய இணைப்பு திட்டம்-உடானின் கீழ் 2018ல் தொடங்கப்பட்ட அதானி குழுமத்தின் முந்த்ரா விமான நிலையத்தை முழு அளவிலான சர்வதேச வர்த்தக விமான நிலையமாக மாற்ற மத்திய அரசு அனுமதி அளித்தது. மும்பை சர்வதேச விமான நிலையத்தை நிர்வகித்து வரும் ஜிவிகே குழும ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, நவி மும்பையில் வரவிருக்கும் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திலும் அதானி குழுமம் முக்கிய பங்கு வகிக்கிறது.
அகமதாபாத், லக்னோ, மங்களூர், ஜெய்ப்பூர், குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதற்கு முன்பாக பொதுத்துறை தனியார் கூட்டுமுயற்சி மதிப்பீட்டுக் குழு, கடந்த டிசம்பர் 11, 2018 அன்று ஆலோசனை கூட்டத்தை ஒன்று நடத்தியது
இந்த ஆலோசனை கூட்டத்தில்“ விமான நிலையங்களை ஏலம் விடுவது தொடர்பாக மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறை சமர்பித்த ஒரு முன்னெச்சரிக்கை செய்திக் குறிப்பும் இடம்பெற்றது.
பொதுத்துறை தனியார் கூட்டுமுயற்சியில் இந்த ஆறு விமான நிலையங்களை குத்தகைக்கு விடும் செயல்முறையின் போது, நிதி மேலாண்மை மற்றும் செயல்திறன் சிக்கல்கள் காரணமாக ஒரே ஏலதாரருக்கு இரண்டு விமான நிலையங்களுக்கு மேல் குத்தகைக்கு விடக் கூடாது என்ற சட்ட நடைமுறை விதிகளை இணைத்துக் கொள்ளுமாறு நிதி அமைச்சகம் தெரிவித்திருகிறது” என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கண்டரிந்தது.
டிசம்பர் 10, 2018 தேதியிட்ட இந்த அறிக்கையை பொதுத்துறை தனியார் கூட்டுமுயற்சி மதிப்பீட்டுக் குழுவிடம் பொருளாதார விவகாரங்கள் துறை இயக்குனர் வழங்கினார்.
இருப்பினும், கூட்டுமுயற்சி மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில், , இந்த முன்னெச்சரிக்கை வழிமுறைகள் தொடர்பாக எந்த விவாதமும் நடைபெறவில்லை.
கூட்டத்தில் முன்னெச்சரிக்கை வழிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிலளித்த, அப்போதைய செயலாளர் எஸ்.சி. கார்க் ( மதிப்பீட்டுக் குழு தலைவர்) , ” விமான நிலையத்தை ஏலம் எடுக்க முன் அனுபவம் தேவையில்லை. ஏற்கனவே செயல்பட்டு வரும் விமான நிலையங்களுக்கான போட்டிகள் விரிவாகும் என்ற அதிகாரமளிக்கப்பட்ட செயலர்கள் குழுவின் (empowered group of secretaries) வாதத்தை முன்வைத்தார்”
ஜூலை 2019 இல் நிதி அமைச்சகத்திலிருந்து மின் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்ட கார்க், இப்போது ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டியின் ஆலோசகராக உள்ளார். இது, தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
ஆறு விமான நிலையங்களுக்கான ஏலங்களை வென்ற ஒரு வருடம் கழித்து, அதானி குழுமம் 2020 பிப்ரவரியில் அகமதாபாத், மங்களூரு மற்றும் லக்னோ விமான நிலையங்களுக்கான சலுகை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக