புதன், 13 ஜனவரி, 2021

விலையுயர்ந்த கார்களில் புலிக்கொடி கட்டிக்கொண்ட விடுதலை வேஷதாரிகள்...

Annam Sinthu Jeevamuraly : · யாழ்ப்பாண பல்கலைகழகத்தை நிரந்தரமாக மூடுவதற்கும், அதை இராணுவ முகாமாக மாற்று வதற்கான முயற்சிகளே இன்று தமிழ் அரசியல் தரப்பாலும் , புகலிட தமிழ் உசுப்பே த்திகளாலும் முன்னெடுக்கபடுகின்றன. இலங்கை அரசியல் வரலற்றில் ஜேஆருக்கு பின் , பலம் பொருந்திய ஆட்சியதிகாரத்தை , கோட்டாவின் அரசு கையில் வைத்திருக்கின்றது. பிரபாகரனின் ,அடிமுட்டாள் தன இராணுவவாதமே முள்ளிவாய்களின் முடிவு. கோட்டாபயவும் பிரபாகாரனுக்கு இணையான இராணுவவாதிதான் 

அதை நாம் முதலில் புரிந்துகொள்ள் வேண்டும். பிரபாகரனின் இராணுவவாதம் முடிவுக்கு வர முப்பது வருடங்களாயின. கோட்டாவின் இனவெறியும் இராணுவவாதமும் எப்பொழுது முடிவுக்கு வரும் என்று இன்று உள்ள அரசியல் சூழலை வைத்து யாராலுமே கணிப்பிடமுடியாது. ஆனால் யார் வேண்டுமானாலும் அப்பாவி மக்களை அவர்களின் அரசியல் இலாபங்களுக்காக உசுப்பேத்த முடியும்.    1983, பாடசாலைகளில் இறுதியாண்டு பரிட்சை நடைபெறவிருந்த வேளைகளில் வினாத்தாள்களை , இயக்கங்கள் கடத்திசென்று கொளுத்தின. சொந்த மக்களின் வங்கிகளையும் , கூடுறவுசங்கக்கடைகள் தபால் நிலையங்கள் , ஆசிரியங்களின் சம்பளப்பணம் , பென்சன் பணம் என இயங்கங்கள் கொள்ளையடித்தன. இதற்கு பின்னால் இருந்தவர்கள் தமிழ்தேசிய அரசியல்வாதிகள்.

முள்ளி வாய்காலின் முடிவுக்கு இந்த பின்னணியில் வளர்ந்த அரசியல் வீக்கமும் , இராணுவவாதம் மிக முக்கிய காரணங்கள்.
இதே முறையை தான் மறுபடியும் தமிழ்தேசிய அரசியல் வாதிகளலும் ,புகலிட தமிழ் உசுப்பே த்திகளாலும் முன்னெடுக்கபடுகின்றன.
இனியொருமுறை முள்ளிவாய்கால் படுகொலை போல ஒன்று நடக்க வாய்ப்பு இருக்கின்றது. அது வேறு வகையில் இருக்கும். மாணவர்களின் கல்வியை சீரழிந்து , யாழ்ப்பாண பல்கலைகழகத்தை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழ் தரப்பே துணைநிற்கும் .
அப்போ என்ன செய்யலாம் என்று நீங்கள் கேட்கலாம் ! இனவாத இராணுவாத அரசுடன் பேசுவதற்கு , புத்திசாலிகளான தமிழ் அரசியல்வாதிகள் உருவாகவேண்டு. அதற்கு நல்ல கல்வியும் , கல்வி நிலையங்களும், பல்கலைகழகமும் , ஆசிரியர்களும் தேவை. கடந்த 30 வருடங்கள் விடுதலை இயங்கங்கள் செய்த வேலை, எல்லாவற்றையுமே அழித்தொழித்தது தான். அதை மீளக்கட்டி எழுப்ப வேண்டும்.
பல்கலைகழகதில் அமைக்கப்பட்ட ,முள்ளி வாய்காலின் நினவு தூபியை மறுபடியும் கட்டுவோம் என்று அடிக்கல் நாட்டி வீரச் சபதம் எடுத்திருப்பது , வேண்டுமென்றால் ஆண்ட பரப்பரை அரசியல் தரப்புக்கு உதவலாம். பல்கலைகழக மாணவர்களுக்கு ஒருபோதும் உதவப்போவதில்லை.
இந்த வீரசபதம் பல்கலைகழகதில் இராணுவத்தை நிரந்தரமாக நிறுத்த வழிகோலப்போகின்றது.

 

Santhirapalan Saminathar : புலிகள் அமைப்பில் சேர்வதைத்தவிர்ப்பதற்காகவும் பொருளாதார ரீதியாக தம்மை வளம்படுத்துவதற்காகவும் இராணுவத்திடம் இருந்து தப்பு வதற்காகவும் வெளிநாட்டுக்கு போனவர்களை குறைகூற முடியாது. ஆனால் அவ்வாறு ஓடியவர்களின் பலர் தற்போது விலையுயர்ந்த கார்களில் புலிக்கொடிகளைக் கட்டிக்கொண்டு தம்மைப் பெரும் தேசபக்தர்களாகவும் விடுதலை உணர்வு வீறு கொண்டு நிற்பதாகவும் காட்டி ஊர்வலம் போவதும் கோசம் போடுவதும் பெரும் கோமாளித்தனம். அப்படியானவர்கள் வெளிநாடு செல்லாமல் புலிகளுடன் இணைத்தல்லவா இருக்க வேண்டும். இவர்களது உள் நோக்கம் இங்குள்ள உசார் மடையர்களை உசுப்பேத்தி பலியாக்கி இரசிக்கும் வக்கிர புத்தியைத்தவிர வேறு ஒன்றும் அல்ல. 

Suthakar Thevarasa அட போங்கப்பா எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்....

 Mohana Dharshiny : அப்படியானால் பேரினவாதம் எது செய்தாலும் பேசாமல் அமைதி காக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? ஓர் ஒடுக்குமுறையை ஏவுகிறவர்களை முதலில் கண்டிக்க வேண்டும். உங்கள் பதிவுகள் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களையே குற்றவாளிக்கிக் கொண்டிருக்கிறது. 

Santhirapalan Saminathar Mohana Dharshiny குளவிக் கூட்டுக்கு கல் எறியாதீர்கள் என்றுதான் கூறுகிறார்.இவ்வளவுகாலமும் எறிந்து அழிந்தது போதும் முதலில் நிதானமாக நின்று கடந்த கால தவறுகளை உணருங்கள் என்றுதான் கூறுகிறார்....

 Annam Sinthu Jeevamuraly : Mohana Dharshiny பேரினவாதிகளை வெறும் கோசம் போட்டு கண்டிப்பதில் எனக்கு ஆர்வமில்லை. ஒடுக்கப்படுபவர்கள் தங்கள் அறியாமையில் இருந்தும், தமிழ் அரசியல் தலைமைகளின் சுயஇலாபங்களுக்கு இனியும் பலி ஆகக்கூடாது என்பதுதான் எனது விருப்பம். அதற்கு கற்றல் அவசியம் , உணர்ச்சி அரசியல் நமக்கு எதையும் பெற்று தரப்போவதில்லை. கடந்த காலங்களில் இருந்து சொற்பமாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் சொல்கிறேன். பேரினவதிகளுடன் அடித்தேன் கவிழ்த்தேன் அரசியல் பொறிமுறை தற்கொலைக்கு சமனானது. .... 

 

Villa Anandaram : Mohana Dharshiny போர்தான் முடிவு, வெற்றி தோல்வியே வரும் கால அரசியலை தீர்மானிக்கும் என்று போரில் குதித்தவர்கள் போர் முடிவை ஏற்காமல் தொடர்ந்த்தும் அதே அரசியலை செய்வதேன்? வென்றவன் பக்கத்திலும் இழப்புகள் உண்டு. இழப்பின் மூலம் தானடைந்த வெற்றியை விட்டு கொடுக்க அவன் இவர்கள் எண்ணுவது போல மோட்டு சிங்களவன் அல்ல. உங்கள் சுயநல அரசியல் தான் அரச அதிகாரத்தை ஒரு ஆர்மிகாரன் கையில் கொடுத்துள்ளது. முள்ளிவாய்கால் சம்பவத்திற்கு எதிரி பக்கத்தில் முக்கிய குற்றவாளி அவனே. அதை சாதிக்க அவனது சக தோழர்களும் உயிர் இழந்துள்ளார்கள். அவனிடம் இருந்து மகத்தான/தயாள (Magnanimous) செயலை எப்படி எதிர் பார்க்க முடியும்? மீண்டும் முன்பு எடுத்த அதே சீண்டல் பலப்பரீட்சை அரசியலை தான் இப்போதும் முன்னெடுக்கிறார்கள். ஆனால் முன்பு இருந்ததிலும் கடுமையான எதிர்வினையை அரசாங்கம் மேற்க்கொள்ளும், கேட்பதற்க்கும் ஆளில்லை என்பதை எதிர் பார்காமலா இது போன்ற சீண்டல் கள் செய்கிறார்கள். பின்னணியில் யார். அரசாங்கமாக கூட இருக்கலாம்....

 TSounthar Sounthar Villa Anandaram சிங்கள அரசுக்கு எதிர் நடவடவெடிக்கை என்றால் ஏன் மலையகத்தில் புதிய ஜனநாயக கடசி சார்பில் ஒரு முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கக்கூடாது .? ....

 Mohana Dharshiny TSounthar Sounthar அதற்கான தேவையும் ஆர்வமும் மக்களுக்கு இருப்பின் அமைக்கலாம். பு.ஜ.மா.லெ மட்டுமல்ல எந்த மா.லெ அமைப்பும் மக்களின் உணர்விலிருந்து தான் ஒரு பிரச்சனையை அணுகும். தன் சொந்த விருப்பத்தின் பெயரில் முடிவுகள் எடுப்பதில்லை. மக்களின் உணர்விலிருந்து ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது மா.லெ கட்சிகள் செய்வதில்லை. ரத்த ஞாயிறு வரலாற்றை படித்திருப்பீர்கள். லெனினும் அவ்வாறுதான் பிரச்சனையை அணுகியிருந்தார்..... 

 

Villa Anandaram : Mohana Dharshiny இலங்கையில் புரட்சி தொடங்க இங்கேயும் ஒரு ரத்த ஞாயிறு இற்காக காத்திருக் கிறீர்களா? அப்படி எத்தனையோ இங்கே வந்துவிட்டது. தோழர் சவுந்தரின் கேள்வியின் நோக்கம் இந்த நினைவு சின்னத்தின் பின்னால் உள்ள அரசியல், அது வெறும் உணர்வல்ல என்பதே. புத்தர் சிலை இருக்கவேண்டிய இடம் பண்சல. அதை தெருவில் வைத்தால் அதற்கு பின்னால் அரசியல் நோக்கம் உண்டு. அதே போல நினைவு சின்னம் நடந்த இடத்திலொ மாயனத்திலோ வேறு ஒரு குறிபிட்ட இடத்திலோ மட்டும் இருந்தால் அது நினைவேந்தலுக்கு மட்டும். பல்கலைகழகத்தில் வைத்தால் அதற்கு அரசியல் காரணமுண்டு. அந்த காரணம் அரசினை சீண்டுவதானால் அரசு சும்மா இராது. இதற்க்காக அரசின் செயலை நியாயப்படுதுகிறேன் என்று அர்த்தம் இல்லை. இது போன்ற சீண்டும் செயலை செய்யக்கூடிய நிலையில் தமிழர் இல்லை. அதை கவுரவமாக அணுகும் அரசாங்கமும் இலங்கையில் இல்லை... 

 

 TSounthar Sounthar :   Villa Anandaram மக்களின் உணர்வை பிரதிபலிக்கவேண்டும் என்றால் கம்யூனிஸ்ட்  இயக்கங்கள் ஏன் ? இருக்கின்ற முதலாளித்துவ கடசிகளே போதுமே ! அவர்கள் அப்படி சொல்லிகொண்டு தானே பிளவுபடுத்தும் அரசியலை நடாத்துகிறார்கள். உழைக்கும் அடிமட்ட மக்களின் நன்மைக்கு இந்த " உணர்வு " என்ன  பலனைத்தரும் என்பதையே கருத்தில் கொள்ளவேண்டும்.... 

 

Arul Ratnam : இதைவிட வேறெப்படி எளிமையாகச் சொல்வது, ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பதும் இதனைத்தானே.. இந்த உண்மையை சாதாரண மக்கள் உணரக்கூடாது என்பதற்காகவே அவர்கள் வெட்டிக்கொண்டிருக்கிறார்கள்.. அன்று பங்கர் இப்போது எதிர்காலப் பங்கருக்கான அத்திவாரம்...

கருத்துகள் இல்லை: