File picture.. film water |
பதில்: அப்பா இறந்தப்ப. தாலி எடுக்கற சடங்குனு ஒரு கொடுமை இந்து மதத்துல இருக்கு. அம்மாக்கு பெரிய பொட்டு, பூ, வளையல்னு அலங்காரம் பண்ணி அடுத்த நாள் இதையெல்லாம் எடுத்தாங்க. நா எவ்ளோவோ சண்ட போட்டும், இது வேணாம்னு கத்தி அழுதும் இத எங்க பாட்டி, அம்மாவோட கூட பொறந்தவங்க, அப்பா கூட பொறந்தவங்க, சொந்தக்காரங்கனு எல்லாரும் இருக்க இந்த சடங்க பண்ணாங்க.
அம்மா இது வேணாம்மா இதெல்லாம் என்னால பாக்க முடியலமானு நா சொல்லியும்,
எங்க அத்தைங்க ‘நீ வாழ வேண்டிய பொண்ணு, உனக்கு இதெல்லாம் எதுவும்
தெரியாதுனு சொல்லி, நீயும் உன் சங்கதிகளும் நல்லா இருக்க இதலாம்
பண்ணனும்னு’ சொல்லி, என்ன ரூம்ல இருந்து வெளிய வராம உள்ளையே இருனு
தள்ளிட்டாங்க. எங்க அப்பா போனத விட, எங்க அம்மா கதறி அழுத சத்தம் தான்
இன்னும் என்ன உடைய வெச்சுச்சு.
தன்னோட துணைய இழந்துட்டு நிலை குளைஞ்சு இருக்க ஒரு பொண்ண, அவங்க அம்மாவுல இருந்து அவங்க ஒட்டு மொத்த குடும்பமே சடங்குங்கற பேர்ல தாலி எடுத்து, பொட்ட எடுத்து, வளையல் உடைச்சி அலங்கோலமா ஆக்கி அவள நொறுக்கிட்டு இருக்கு. வெளிய வந்து பாத்தப்ப நெத்தில விபூதி பட்டைய வெச்சு, கோணி புடவைய அம்மாவுக்கு சுத்தி வெச்சிற்தாங்க. அம்மா நல்லா படிச்சவங்க. double MA, B.Ed, M.Phil(ஆசிரியர்). சொந்த கால்ல நிக்கற independent women. ஆனாலும் இந்த சமூகமும், சொந்த குடும்பமுமே இந்த கொடுமைய அவங்களுக்கு பண்ணும் போது அவங்களால வாய் திறந்து பேச கூட முடியல.
அன்னைக்கு அந்த கருமத்த தூக்கி போட்டவ தான். ஏதோ தங்கமா போச்சேனு செயின் மட்டும் வெச்சிற்கேன். இப்போலாம் அம்மா ஏன் தாலி போட்றது இல்லனு என்ன கேக்கறதே இல்ல. சில விஷயம்லாம் கடைசி மூச்சு இருக்க வரைக்கும் நியாபகம் இருக்கும். அப்டி தான் எங்க அம்மாவுக்கு நடந்த இந்த தாலி எடுக்கற சடங்கும். எங்க அம்மாவுக்கு மாதிரி , பல பெண்களுக்கு சடங்குனு புருஷன் போயிட்டா நடக்கற இந்த கொடுமை உங்க வீட்ல நடக்காம பாத்துக்கோங்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக