மாலைமலர் :
சோனியா, பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி
ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பை திரும்பப் பெற
மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
>
புதுடெல்லி:
1985 ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு, பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு படை பாதுகாப்பு (எஸ்.பி.ஜி)
உருவாக்கப்பட்டது. இவர்கள் பிரதமர் முன்னாள் பிரதமர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
தற்போது பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கு சிறப்பு படையினரின் (எஸ்.பி.ஜி) பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சோனியா காந்தி குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இனி அவர்களுக்கு சி.ஆர்.ப்.எப். எனப்படும் துணை ராணுவப் படைகளின் மூலம் இசட் பிளஸ் பாதுகாப்பு நாடு முழுவதும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்ட சிறப்புப் படை பாதுகாப்பு சமீபத்தில் திரும்பப் பெறப்பட்டது நினைவிருக்கலாம்
>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக