வியாழன், 7 நவம்பர், 2019

கோவை சிறுமி பாலியல் வழக்கு: தூக்கு தண்டனை உறுதி... உச்ச நீதிமன்றம் ...

தினமலர் :  புதுடில்லி: கோவையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
கோவை, ரங்கேகவுடர் வீதி, காத்தான் செட்டி வீதியில் வசிக்கும் துணிக்கடை உரிமையாளர் ரஞ்சித்குமார்(40). இவரது மகள் முஸ்கன்(11), மகன் ரித்திக்(8) ஆகியோர், நகரிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி காலை வாடகை வேனில் பள்ளிக்குச் செல்ல வீட்டருகே காத்திருந்தனர். அப்போது, கால்டாக்சியில் வந்து இவ்விரு குழந்தைகளையும் உடுமலை அருகேயுள்ள தீபாலப்பட்டிக்கு கடத்திய நபர்கள், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன்பின், குழந்தைகள் இருவரையும் அங்குள்ள பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீரில் தள்ளி கொலை செய்தனர்.
 கோவையைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் முஸ்கான் மற்றும் ரித்திக் ஆகிய இருவரை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு கோவை நீதிமன்றம் துாக்குத் தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை உறுதி செய்து ஆகஸ்டு 1 -ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றவாளி மனோகரன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று தள்ளுபடி செய்து துாக்கு தண்டனையை உறுதிபடுத்தியது.
இக்கொலை வழக்கில் பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த கால்டாக்சி டிரைவர் மோகன் (எ) மோகனகிருஷ்ணன் (37), இவனது கூட்டாளியான டிராக்டர் டிரைவர் மனோகரன்(23) ஆகியோரை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, விசாரணைக்கு அழைத்து சென்ற போது, துப்பாக்கியால் சுட்டு தப்பி செல்ல முயன்ற மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டான்.
இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவை மனோகரனுக்கு துாக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டன. இதனை எதிர்த்து மனோகரன், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், செப்., 20ம் தேதி தூக்குதண்டனையை உறுதி செய்தது.

துாக்கு தண்டனையை எதிர்த்து மனோகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை இன்று (நவ.,7) விசாரித்த நீதிபதிகள், சீராய்வு மனுவை ரத்து செய்தனர். இதனால், மனோகரனின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. தண்டனைக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை: