vikatan.com - சத்யா கோபாலன் :
கடந்த மாதம் பாலிவுட்
பிரபலங்கள் பிரதமர் மோடியைச் சந்தித்த நிகழ்வு நடைபெற்றது. அங்கு நடந்தவை
பற்றி பாடகர் எஸ்.பி.பி தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக டெல்லியில்
பிரதமர் மோடி, பாலிவுட் பிரபலங்களுடன் கலந்துரையாடினார்.
கடந்த மாதம் 19-ம் தேதி மாலை பிரதமர் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக் கான், அமீர் கான், நடிகைகள் கங்கனா ரனாவத், சோனம் கபூர், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, ராஜ்குமார் சந்தோஷி, அஸ்வினி ஐயர் திவாரி, தயாரிப்பாளர்கள் போனி கபூர், எக்டா கபூர், ஜெயந்திலால் காடா போன்ற பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “படைப்பாற்றல் சக்தி என்பது மிகவும் அளப்பரியது, அது நமது தேசத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுவது அவசியம். பாலிவுட்டின்
முன்னணி பிரபலங்கள் உடனான சந்திப்பு பலனளித்தது. உங்கள் படைப்பு
முயற்சிகளை உறுதிப்படுத்த அரசாங்கத்தின் தரப்பிலிருந்து உதவுவதில் நான்
மகிழ்ச்சியடைகிறேன்” என்று பேசியிருந்தார். சினிம பிரபலங்கள் ஒன்றாக
இணைந்து பிரதமர் மோடியை கலந்துகொண்டது இந்திய அளவில் அதிகம் கவனம்
ஈர்க்கப்பட்டது.கடந்த மாதம் 19-ம் தேதி மாலை பிரதமர் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக் கான், அமீர் கான், நடிகைகள் கங்கனா ரனாவத், சோனம் கபூர், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, ராஜ்குமார் சந்தோஷி, அஸ்வினி ஐயர் திவாரி, தயாரிப்பாளர்கள் போனி கபூர், எக்டா கபூர், ஜெயந்திலால் காடா போன்ற பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அதே அளவு அந்த நிகழ்ச்சி பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. காந்தி பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள வட இந்திய நடிகர், நடிகைகள் மட்டுமே அழைக்கப்பட்டனர். தென் இந்தியாவில் பல முக்கிய பிரபலங்கள் இருந்தும் அவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை எனத் தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா குற்றம் சாட்டியிருந்தார்.
அதன்பிறகு தேர்தல், தீபாவளி போன்றவை வரிசை கட்டியதால் உபாசனாவின் கருத்து பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. தற்போது காந்தி பிறந்த நாள் விழா தொடர்பாக இதே போன்ற ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார் பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம். “ஈநாடு நிறுவனர் ராமோஜி ராவ்ஜிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் அவரால் தான் அக்டோபர் 19-ம் தேதி பிரதமர் இல்லத்தில் நடந்த விழாவில் நான் கலந்துகொண்டேன். நாங்கள் அனைவரும் பிரதமர் வீட்டுக்குள் நுழையும்போது எங்கள் செல்போன்களை பாதுகாவலர்கள் வாங்கிக்கொண்டு அதற்கான டோக்கன்களை வழங்கினர். ஆனால் அன்று பிரதமருடன் பல பிரபலங்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர், அதைப் பார்த்து நான் திகைத்தேன். நம்மை ஹ்ம்ம்….. என்று அமைதியாக இருக்க வைக்கும் விஷயம்?” என தன் ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார்.
vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக