வெள்ளி, 8 நவம்பர், 2019

திராவிடத்தை அழிக்க ஆர் எஸ் எஸ் களம் இறக்கிய தமிழக தலைவர்கள் வரலாறு

Kandasamy Mariyappan : எம்.ஜி.ராமச்சந்திரன் முதல் பழனிச்சாமி வரை!
டெல்லியின் நண்பர்களாக இங்கே உருவெடுக்கும் ஒவ்வொருவரும் அவரவர் காலத்தில் திராவிட சித்தாந்தத்தை அழிக்க நேரடி &; மறைமுக RSS ஆட்கள் எடுத்த தீவிர நடவடிக்கைகளே!
1971 தேர்தல் வெற்றிக்குப் பிறகு, திமுகவை ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டியது RSS. ஏனென்றால் இங்க ராமரை செருப்பால் அடித்த திமுக என்று பிரச்சாரம் செய்தும், திமுக அமோக வெற்றி பெற்றிருந்தது.
வேத புரட்டுகளை மக்களுக்கு எடுத்துரைத்த சித்தாந்தங்கள், ஒன்று கம்யூனிஸம் மற்றொன்று திராவிடம். கம்யூனிஸத்தை வளைத்துப்போட்ட பார்ப்பணர்களால், பெரியாரின் சீரிய சிந்தனை காரணமாக திராவிட இயக்கத்திலும், திமுகவிலும் நுழைய முடியவில்லை.
எனவே அது ராமச்சந்திரன் என்ற இந்திராவின் அடிமையை பயன்படுத்திக்கொண்டது. திமுகவை விட்டு வெளியேறியிருந்த அவரை வைத்து, வேத சித்தாந்தமான சாதீயத்திற்கு மீண்டும் தூபம் போட்டது. பார்ப்பனீய ஊடகங்களின் துணையோடு கலைஞர் மீதும், திமுக அமைச்சரவை மீதும் சேற்றை வாரி வீசத் தொடங்கியது.
1976 - 77
நெருக்கடி நிலையை எதிர்த்த ஆளுங்கட்சிகள்: ஒன்று திமுக மற்றொன்று குஜராத் சுதந்திரா கட்சி

நெருக்கடி நிலையை எதிர்த்த திமுகவை பழிவாங்க வேண்டும் என்று திருமதி இந்திரா, திமுக ஆட்சியை கலைத்து விட, அதை தொடர்ந்து, January 76 முதல் June 77 அந்த ஒன்றரை ஆண்டு முழுக்க, பார்ப்பணீய ஊடகங்களான துக்ளக், ஆனந்தவிகடன், குமுதம், கல்கி போன்ற வார, மாத இதழ்கள் தினமலர், தினமணி, தினபூமி, The Hindu, Indian Express என்ற தின இதழ்கள் மூலமாக முந்தைய திமுக ஆட்சியைப் பற்றியும் கலைஞரைப் பற்றியும் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி, பொய் பிரச்சாரங்களை செய்து கொண்டே இருந்தனர்.
இதன் காரணமாக 77ல் நடந்த தேர்தலில், கொள்கை லட்சியத்துடன் எமர்ஜென்சியை தைரியமாக எதிர்த்த திமுகவை, தோற்கடித்து விட்டனர். டெல்லியின் அடிமை ராமச்சந்திரன் முதலமைச்சராக வந்துவிட்டார். அப்படியிருந்தும் அவரை டெல்லியும் சரி, RSSம் சரி முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.
காரணம்:
என்ன தான் டெல்லி அடிமையாக ராமச்சந்திரன் இருந்தாலும்
நாவலர் நெடுஞ்செழியன்,
ஆர் எம் வீரப்பன்,
எஸ் டி சோமசுந்தரம்,
அரங்கநாயகம்,
கே.ஏ.கிருஷ்ணசாமி
போன்ற திராவிட மிச்சங்கள் அங்கே இருந்தது, திராவிடத்திற்கு பாதுகாப்பாக இருந்தது.
2019 - 20
80களில் நடைமுறைப்படுத்திய அதே Strategyஐ மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது RSS.
தற்பொழுது, 9 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுகவை, ஆளுங்கட்சி மட்டும் இல்லாமல் சில்லறை கட்சிகளையும், சில்லறை இயக்கங்களையும் வைத்து தீவிரமாக விமர்சித்து வருகிறது RSS. சமீபத்தில் மத்திய மாநில அரசுகளின் தவறுகளை மறைக்க, திமுக தலைவர் மீது தனிமனித தாக்குதலை நடத்தி, ஆளுங்கட்சியின் தவறுகளில் மக்கள் கவனம் செலுத்தாமல் பார்த்துக் கொள்கிறது.
இதுதான் RSS குணம்.
எல்லாவற்றுக்கும் மேலாக,
அப்பொழுது இல்லாத ஆபத்து இப்பொழுது திராவிடத்திற்கு உள்ளது.
காரணம்,
எம்ஜி ராமச்சந்திரன் காலம் போன்று இல்லாமல், தற்பொழுது இந்த அரசு அடிமையாக மட்டுமல்ல,
கல்லுளிமங்கன்,
சொம்பு,
PIMP
போன்றவர்களுடன்
பல பைத்தியங்களும் இந்த அரசில் இருக்கின்றன. இதுதான் RSS எதிர்பார்த்த ஆட்டு மந்தைகள்.
மேலும் தான் மக்களை சந்திக்க வேண்டும், அவர்கள் தன்னை எந்த வகையிலும் நிந்திக்க கூடாது என்ற அச்சம் ராமச்சந்திரனுக்கு இருந்தது.
இப்பொழுது உள்ள அடிமைகளுக்கு அதெல்லாம் ஏதுமில்லை.
இந்தக் கூட்டங்களுக்கு திராவிட சித்தாந்தம் பற்றிய அறிவு சிறிதும் கிடையாது. இந்த கூட்டத்தக்குத் தெரிந்தது எல்லாம் பணம் மட்டுமே. அதற்காகத் தான் ஜெயலலிதாவிடம் அடிமைகளாக இருந்தது போன்று, இப்பொழுது மோடியின் அடிமைகளாக இருக்கிறார்கள்.
எனவே, திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள், முழு உத்வேகத்துடன், புதிய strategy போட்டு அவர்கள் செய்யும் பிரச்சாரம் முழுமையும் அடிமை அதிமுக மீது மட்டுமே இருக்குமாறு செய்ய வேண்டும்.
பாமக போன்ற சில்லறைகளையோ, மற்ற பைசாக்கும் பயன்படாத இயக்கங்கள் மீதோ கவனம் செலுத்தாமல்
அடிமை அதிமுக அரசால் ஏற்பட்ட இழப்பை மட்டுமே பேசு பொருளாக மாற்ற வேண்டும்.
அன்று துக்ளக், குமுதம், ஆனந்த விகடன், கல்கி, சாவி போன்ற பார்ப்பனீய ஊடகங்கள் தின்னை பிரச்சாரங்களாக செயல்பட்டது போன்று மக்களை ஊடங்கங்கள் மூலமும் வேறு பல வழிகள் மூலமும் சென்றடைய வேண்டும்.

கருத்துகள் இல்லை: