Shyamsundar- tamil.oneindia.com
டெல்லி: அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும்
என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட இடமான
2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைதான் இந்த முக்கிய
வழக்கிற்கு காரணம் ஆகும். எந்த அமைப்பு அந்த நிலத்திற்கு உரிமை கோர
முடியும் என்பதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம்.
இந்த சர்ச்சைக்குரிய 2 .77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் பிரித்துக் கொள்ள
வேண்டும் என்று அலஹாபாத் நீதிமன்றம் கூரியது. இதை எதிர்த்து சன்னி வக்பு
வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் உச்ச
நீதிமன்றம் சென்றனர். இதன் மீதான விசாரணை நடந்து வந்தது
வழக்கு விவரம்
அயோத்தி வழக்கு தொடர்பான 14 மேல்முறையீட்டு மனுக்கள், மற்றும் புதிய மனு
ஒன்று ஆகியவற்றின் மீதான விசாரணை நடந்து வந்தது. உச்ச நீதிமன்ற தலைமை
நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக்
பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர்.
அயோத்தி வழக்கில் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா
தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்,
வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றனர். பெரிதும்
எதிர்பார்க்கப்பட்ட இந்த சமரசம் தோல்வியில் முடிந்தது. சமரச முயற்சி தோல்வி
அடைந்துவிட்டதாக மூவர் குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கு உச்ச
நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
வேகம் எடுத்த விசாரணை
..
இந்த வழக்கில் விசாரணை மிகவும் விறுவிறுப்பாக சென்றது. அனைத்து தரப்பும்
தினமும் வாதங்களை வைத்தனர். விடுமுறை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும்
இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. பல்வேறு புதிய ஆதாரங்கள், வாதங்கள் இந்த
வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டது.
என்ன ஆதாரம்
என்ன ஆதாரம்
இதில் சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3
பிரிவினரும் தங்கள் தரப்பு வாதங்களை வைத்தனர். இதனால் கடைசி கட்டத்தில்
இந்த வழக்கு சூடு பிடித்தது. மொத்தம் 40 நாட்கள் இந்த வழக்கு உச்ச
நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட்டது.
இன்று தீர்ப்பு..
இந்த வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்படும் என்று
எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அயோத்தி வழக்கில் இன்று உச்ச
நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்
வழக்கில் இன்று தீர்ப்புவழங்கப்பட உள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு
தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
யார் வழங்குகிறார்கள்
யார் வழங்குகிறார்கள்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட்,
அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பு
வழங்குகிறார்கள். தீர்ப்பை அடுத்து நாடு முழுக்க பாதுகாப்பு
அதிகரிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/ayodhya-case-verdict-will-be-announced-today-morning-in-sc/articlecontent-pf412587-367910.html
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/ayodhya-case-verdict-will-be-announced-today-morning-in-sc/articlecontent-pf412587-367910.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக