தற்கொலைக்கு முயன்ற இருபது
இலங்கை தமிழ் இளைஞர்களில்
இருவர் ஆபத்தான நிலையில்...சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் பல நாட்கள் உண்ணாவிரத்தின் பின்னர் யாரும் கவனிக்கவில்லை என்று விசம் அருந்தி உள்ளனர்.
தந்தி டிவி :திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் பாஸ்போர்ட் இன்றி தங்கியிருத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 72 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தண்டனை காலம் முடிந்தும், சொந்த நாட்டிற்கு அனுப்பவில்லை எனக்கூறி, நேற்று முதல், இலங்கை, வங்கதேசம், பல்கேரியா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த 46 பேர் தொடர்
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 2ஆம் நாளான இன்று, அவர்களில் சிலர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறப்பு துணை தாசில்தார் சுந்தரராஜன் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
வெப்துனியா ": செங்கல்பட்டு அகதிகள் முகாமில் உள்ள 7 பேர் தங்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்றக்கோரி கடந்த 23-ந்தேதி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினர். இதில் தவதீபன், காண்டீபன், செல்வராஜ் உள்பட 6 பேரின் உடல்நிலை மோசமானது.
இந்நிலையில் அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிகாரிகளின் சமரசத்தை ஏற்காமல் தொடர்ந்து அங்கும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இதற்கிடையை முகாமில் இருந்த பரமேஸ்வரன், ராசுதீன் உட்பட மேலும் 5 பேர் தங்களையும் திறந்தவெளி முகாமுக்கு மாற்றக்கோரி உண்ணாவிரதத்தை தொடங்கினர்.உண்ணாவிரதம் இருந்த ரமேஷ், காந்தி மோகன், கஜன் ஆகியோரின் உடல்நிலை நேற்று மாலை சோர்வடைந்தது. அவர்கள் 3 பேரையும் செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கும் சாப்பிட மறுத்து போராட்டத்தை தொடங்கி வருகிறார்கள்.
இன்று காலை நாதன், மயூரன், சுதர்சன், ஸ்ரீசாந்தன் ஆகியோரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதனால் அகதிகளின் போராட்டம் வலுவடைந்துள்ளது. இதுவரை மொத்தம் 16 பேர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 9 பேர் மருத்துவமனையிலும் 7 பேர் முகாமிலும் உள்ளனர்.
ஈழத்தமிழர்களை அடைப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த சிறப்பு முகாமில், குற்றவாளிகள் மட்டுமில்லாமல், குற்றம் சுமத்தப்பட்டவர்கள், வழக்கில் இணைக்கப்பட்டவர்கள், வழக்கில் பிணை கிடைத்தவர்கள், வழக்கு விசாரணை முடிந்து விடுதலையானவர்கள் என பலரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எந்த முகாந்திரமும் இல்லாமல் பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த அகதிகளின் உரிமைக்குரல் நசுக்கப்பட்டும், கவனிப்பாரற்றும் உள்ளது. இந்தப் போராட்டத்திற்காவது தமிழக அரசும், மத்திய அரசும் செவி சாய்க்குமா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக