சனி, 9 நவம்பர், 2019

Babri Masjid Verdict Live: அயோத்தி வழக்கில் தீர்ப்பு..... லைவ் தொலைக்காட்சி வீடியோ


/tamil.samayam.com/ : பல ஆண்டுகளாக நீடித்து வரும் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இதையொட்டி நாடு முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

  • உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்காக காத்திருக்கும் இந்தியா
  • அயோத்தி வழக்கில் தீர்ப்பு என்னவாக இருக்கும்?

  • உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்குகிறது. இதன் காரணமாக நீதிமன்ற வளாகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    Live Updates:

    * தீர்ப்பு வழங்குவதற்காக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உச்ச நீதிமன்றம் வந்தடைந்தார்.

    * அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர்களை தனது இல்லத்திற்கு வருமாறு அமித் ஷா அழைத்துள்ளார்.

    * ஸ்ரீராம் லல்லா கோயிலிற்கு பக்தர்கள் வழக்கம் போல் சென்று வருகின்றனர். இதற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. மார்க்கெட் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. நிலைமை சீராக இருக்கிறது - அசுவதோஷ் பாண்டே, ஏடிஜி(உ.பி போலீஸ்)


    * தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று வழங்கும் தீர்ப்பை காண உச்ச நீதிமன்ற வளாகத்தில் குவிந்த வழக்கறிஞர்கள்.
    * ராஜஸ்தான்: ஜெய்ப்பூரில் இன்று காலை 10 மணி முதல் 24 மணி நேரத்திற்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டு உள்ளன.

    * அயோத்தியில் துணை ராணுவப் படையினர் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு உள்ளனர். ட்ரோன்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். முக்கிய இடங்களில் அனைத்து தரப்பினரிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அயோத்தி தீர்ப்பு: மீடியாவை சந்திக்கிறார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்!!

    * அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. இதையொட்டி உச்ச நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    * ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    * உத்தரப்பிரதேச மாநில மதத் தலைவர்கள், பொதுமக்களுடன் 10,000 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் எந்தவித தவறான செய்தியும் பரப்பக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது - ஓ.பி.சிங், டிஜிபி

     
    * உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    * அயோத்தியில் 20,000க்கும் மேலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    * இன்று காலை சரியாக 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது

    * வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை 40 நாட்கள் தொடர்ச்சியாக நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இது உச்ச நீதிமன்ற வரலாற்றில் இரண்டாவது மிக நீண்ட விசாரணை வழக்கு ஆகும்

    கருத்துகள் இல்லை: