மாலைமலர் :
கன்னியாகுமரியில் 40 ஆயிரம் கோடி ரூபாய்
மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி:<
கன்னியாகுமரி
மாவட்டத்தில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் குமரி மாவட்ட மக்களுக்கான
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று
குமரி மாவட்டம் வந்தார். இதற்கான விழா அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி
வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட
தனுஷ்கோடி - ராமேஸ்வரம் இடையிலான ரயில் பாதை அமைத்தல், பாம்பன் -
ராமேஸ்வரம் இடையே புதிய பாலத்தை திறந்து வைத்தல், மதுரை - செட்டிக்குளம்
இடையே 4 வழிச்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி
தொடங்கி வைத்தா
முன்னதாக,
திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கன்னியாகுமரி
வருகை தந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் வரவேற்றனர்.
துணை
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக
பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தம்பிதுரை எம்.பி. ஆகியோரும்
வரவேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக