மாலைமலர் :அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ,
திருவனந்தபுரம், மங்களூரு
ஆகிய 5 விமான நிலையங்களின் நிர்வாகம், பராமரிப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை அதானி நிறுவனம் பெற்றது. புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, கவுகாத்தி, திருவனந்தபுரம், மங்களூரு விமான நிலையங்களின் பராமரிப்பு நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.< இந்திய விமானப்போக்குவரத்து முகமையிடம் இருந்த இந்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு உலகத்தரமான சேவைகளை வழங்கும் வகையில் பொதுத்துறை மற்றும் தனியார் ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கவுகாத்தி விமான நிலையம் தொடர்பான தகவல் ஏதும் இன்றுவரை வெளியாகவில்லை

மேற்கண்ட விமான நிலையங்களை பராமரிப்பதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிடன் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில்,
அகமதாபாத், ஜெய்ப்பூர் விமான நிலையங்களை பராமரிக்க தலா 7 நிறுவனங்களும்,
லக்னோ, கவுகாத்தி விமான நிலையங்களை பராமரிக்க தலா 6 நிறுவனங்களும்,
திருவனந்தபுரம், மங்களூரு விமான நிலையங்களை பராமரிக்க தலா 3 நிறுவனங்களும்
முன்வந்து டெண்டரில் பங்கேற்றன. மொத்தம் 10 நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தை
பெற போட்டியிட்டன.
இவற்றில் அதிகமான தொகைக்கு
ஒப்பந்தம் கோரி இருந்த பிரபல தொழிலதிபர் கவுதம் அதானிக்கு சொந்தமான
நிறுவனத்துக்கு அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, திருவனந்தபுரம், மங்களூரு
ஆகிய 5 விமானங்களை பராமரித்து நிர்வகிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
கவுகாத்தி விமான நிலையம் தொடர்பான தகவல் ஏதும் இன்றுவரை வெளியாகவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக