tamil.oneindia.com - koya-lekhaka:
தூத்துக்குடியை வலம் வரும் கனிமொழி- வீடியோ
சென்னை:
கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடவிருப்பது உறுதியாகி விட்டதால் அந்தத்
தொகுதியை கேட்க வேண்டாம் என்று கூறி விட்டாராம் மதிமுக பொதுச் செயலாளர்
வைகோ.
திமுக கூட்டணியில் உள்ள மதிமுக 2 தொகுதிகளை கேட்டு வந்தார். ஆனால் ஒரு தொகுதி மட்டுமே என்பது திமுகவின் நிலைப்பாடு. வேண்டுமானால் ராஜ்யசபா தருகிறோம் என்று கூறி விட்டது திமுக.
மதிமுக கேட்கும் மற்றொரு லோக்சபா தொகுதிக்கு பதில் வைகோவை ராஜ்யசபாவுக்கு அனுப்ப உள்ளாராம் ஸ்டாலின். நம்பமுடியவில்லையா.. ஒன் இந்தியா தமிழுக்கும் அப்படித்தான் இருந்தது, வேறு என்ன செய்வது சொல்லிய நபர் நம்பத்தகுந்தவர் ஆயிற்றே.
மத்தியில் சரியான ஆள் இல்லை மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் அவர்களை எதிர்த்து குரல் கொடுக்க சரியான ஆள் வைகோ என்பது திமுகவின் எண்ணமாம்.
மேலும், கருணாநிதியுடன் அவர் பயணித்தது உள்ளிட்ட சில பல கணக்குகளை போட்டு வைகோவை மாநிலங்களவை உறுப்பினராக்கும் முடிவை எடுத்துள்ளாராம் ஸ்டாலின்.
கனிமொழி, திருச்சி சிவா ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூலையில் முடிகிறது. கனிமொழி தூத்துக்குடியில் களம் காண உள்ளார். தூத்துக்குடியை ஆரம்பத்தில் கேட்டதாம் மதிமுக. காரணம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்ததால் அந்த தொகுதியில் வைகோவிற்கு செல்வாக்கு அதிகரித்தது தான்.
இதனிடையே கனிமொழி போட்டியிட உள்ளதை அறிந்த வைகோ, தூத்துக்குடியை பற்றி வாய் திறக்க வேண்டாம் என கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுக்கு உத்தரவு போட்டதாக கூறப்படுகிறது. கனிமொழியின் நெகிழ்ச்சி
இதனால் நெகிழ்ந்து போன கனிமொழி வைகோவுக்கு தான் வகிக்கும் பதவியை கொடுக்கலாம் என யோசனை கூறினார். கூட்டி கழித்து பார்த்து ஸ்டாலினும் அந்த முடிவுக்கே வந்துவிட்டார் எனக் கூறுகிறார் முன்னணி நிர்வாகி ஒருவர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக