தினத்தந்தி :யாருடன் கூட்டணி அமைப்பது? என்று இன்னும் முடிவு செய்யாமல்
தே.மு.தி.க. மதில் மேல் பூனையாக இருந்து வருகிறது. அந்த கட்சியுடன்
அ.தி.மு.க. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முதல்-அமைச்சர்
எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம்,தமிழகத்தில், நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியை அமைத்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் கட்சிகள் உள்ளன.
ஆளும்
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பாரதீய
ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், என்.ஆர்.காங்கிரசுக்கு ஒரு தொகுதியும்
ஒதுக்கப்பட்டு உள்ளன. மற்ற கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க. தலைவர்கள்
பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரசுக்கு 10
தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும்
ஒதுக்கப்பட்டு இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட
கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினா
கணிசமான வாக்கு வங்கியை வைத்து இருக்கும் தே.மு.தி.க. வின் நிலை என்ன? என்பதுதான் இப்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
தே.மு.தி.க.வுடன்
அ.தி.மு.க. தலைவர்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில்,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை
சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தி.மு.க.
கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.
அ.தி.மு.க.
கூட்டணியில் பா.ம.க.வுக்கு சமமான தொகுதிகளை தே.மு.தி.க. கேட்பதாகவும்,
இதனால்தான் இழுபறி நிலை நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த
நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவும் தயார் என்று
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா அதிரடியாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து
தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
என்றாலும்
அந்த கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் சேருமா? அல்லது தி.மு.க. அணியில்
இணையுமா? அல்லது இரு கட்சிகளையும் தவிர்த்து விட்டு, ‘என் வழி தனி வழி’
என்று தனித்து களம் இறங்குமா? என்பது பற்றி இதுவரை உறுதியாக எதுவும்
தெரியவில்லை.
தற்போதைய நிலையில், அந்த கட்சி மதில் மேல் பூனையாகவே இருக்கிறது.
சேலத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அவர், பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாடாளுமன்ற
தேர்தலில் மேலும் சில கட்சிகளுடன் அ.தி.மு.க. சார்பில் பேச்சுவார்த்தை
நடத்தப்பட்டு வருகிறது. தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி
வருகிறோம்.
மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி
பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் அது முடிந்தவுடன்தான், அ.தி.மு.க. எத்தனை
தொகுதிகளில் போட்டியிடும் என்பது பற்றி தெரியவரும். நாங்கள் அமைத்திருப்பது
மெகா கூட்டணி.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தன்னந்தனியாக நின்று 37 தொகுதிகளில்
வெற்றி பெற்று இந்திய அளவில் 3-வது பெரிய கட்சியாக திகழ்ந்தது. அதேபோல்,
இந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி
பெறும். அதேபோல், 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அமோக வெற்றி
பெறுவோம். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று
ஆட்சி அமைக்கும். தமிழகத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க. தலைமையில் தான்
கூட்டணி. மத்தியில் பாரதீய ஜனதா கட்சி தலைமையில் கூட்டணி.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக