செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

இந்திய விமானம் பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறுகிறது ... குற்றம் சுமத்தும் பாக்கிஸ்தான்

tamil.indianexpress.com : Indian Airforce cross LOC Claims Pakistan live updates : பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் காஃபூர் “இந்தியாவின் போர் விமானம் முசாஃபர்பாத் பகுதியில் அனுமதியின்றி உள்ளே நுழைந்து, பாலக்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தானின் துரித செயல்பாட்டினால் அங்கிருந்து விரைவாக வெளியேறியதாகவும்” குற்றசாட்டினை முன்வைத்தார்.
இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் ட்வீட் செய்துள்ளார். பாகிஸ்தானின் குற்றசாட்டிற்கு இந்தியா தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் தரப்படவில்லை.
Indian Airforce cross LOC Claims Pakistan live updates 09:20 AM : 1000 கிலோ வெடி மருந்து கொண்டு தாக்குதல்
 மிரேஜ் 2000 என்ற போர் விமானங்கள் 12ன் மூலம் இந்த தாக்குதலை இந்தியா இன்று அதிகாலை 03:30 மணி அளவில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. சுமார் 1000 கிலோ எடை கொண்டுள்ள வெடி பொருட்களை எல்லைப் பகுதியில் அமைந்திருந்த தீவிரவாத முகாமை தாக்கி அளித்துள்ளாதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

இந்த செய்தியை இன்னும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் உறுதி செய்யவில்லை. 09:00 AM : பாலகோட் எங்கே உள்ளது ?
காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு தெற்கே 28 கி.மீ தொலைவிலும், ஸ்ரீநகருக்கு 93 கி.மீ தொலைவிலும் பாலக்கோட் அமைந்திருக்கிறது. 08:30 AM : புல்வாமா தாக்குதல் பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரில் இருந்து ஜம்மு நோக்கி விரைந்து கொண்டிருந்த ராணுவ வீரர்களின் பேருந்து மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.

கருத்துகள் இல்லை: