25 Afghan soldiers killed in Taliban attack on military base where U.S. mission operatesதினத்தந்தி : :ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளின் தாக்குதலில் அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் 23 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
கந்தஹார், ஆப்கானிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் தலீபான் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்பட முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அமெரிக்கா மற்றும் தலீபான் தீவிரவாதிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதனிடையே தற்காலிக அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட தொடங்கினர். இந்த நிலையில், அந்நாட்டின் தென்மேற்கே அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் கூட்டு ராணுவ தளம் அமைந்து உள்ளது. இங்கு புகுந்த தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் படையினருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். பல மணிநேர சண்டையில் 23 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். எனினும், படையினர் நடத்திய பதிலடியாக நடத்திய தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் என ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்கர்கள் யாரும் காயமோ அல்லது கொல்லப்படவோ இல்லை என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக