திங்கள், 18 டிசம்பர், 2017

ஜக்கி வாசுதேவ்வின் மோசடிகளை மக்களிடம் அம்பலப்படுத்த போகிறேன்:

இந்தியாவின் தண்ணீர் மனிதன் பேட்டி< ஈசா  மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசு தேவ் நடத்திய rally for rivers திட்டம்  மக்களிடம் இருந்து நிலத்தை பிடுங்குவதற்கான  திட்டம் எனவும் இந்த திட்டத்திற்காக தன்னுடைய பெயரை  தவறாக பயன்படுத்தப்பட்டு இருப்பதாக இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்று அழைக்கப்படும் ராஜேந்தர்சிங் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 இந்தியாவின் ’தண்ணீர் மனிதர்’  ராஜேந்தர் சிங்  கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,  rally for rivers  என்ற பெயரில் இயக்கம் நடத்திய  ஈசா யோகா  மைய நிறுவனர்  ஜக்கிவாசுதேவ் தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி இருந்ததாக குற்றம்சாட்டினார்.  ஓரு அரசாங்கம் ஆற்றையும் , நீர் நிலைகளையும் மாசு படுத்தும் போதும்,   அதை கெடுக்கும் போதும்  அதை தடுப்பது தான்  சாமியாரின் வேலை  என  மட்டுமே ஜக்கிவாசுதேவினை சந்தித்த போது  தெரிவித்தேன்  எனவும்  ராஜேந்திர சிங் தெரிவித்தார். இதுவரை நாடு முழுவதும்  9 ஆறுகளை மீட்டுஎடுத்து இருக்கின்றேன் என தெரிவித்த அவர் ,  இதுவரை மிஸ்டு கால் மூலம் நதிகளை மீட்டு எடுப்பது குறித்து எனக்கு  எதுவும் தெரியவில்லை  எனவும் அது எப்படி சாத்தியம் என்பதும் தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.
rally for rivers என்பது  மக்களிடம் இருந்து நிலத்தை பிடுங்குவதற்கான இந்த திட்டம் எனவும் இந்த திட்டத்தை காட்டி பல மாநிலங்களில் ஓப்பந்தம் போடப்பட்டு இருப்பதாகவும் அது தவறான நடவடிக்கை எனவும் குற்றம்சாட்டினார். பழங்குடி பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் தொடந்துள்ள வழக்கு ஜெயித்து விட்டால்  5 வது சாமியராக ஜக்கி வாசுதேவ்  சிறையில் இருப்பார் எனவும் இவரை அம்பலப்படுத்தாவிட்டால் ஆறுகளுக்கும் , சுற்றுசூழலுக்கும்  பெரும் கேடு ஏற்படும்  எனவும் தெரிவித்தார்.  ஜக்கி வாசுதேவ்வின் மோசடிகளை மக்களிடம் அம்பலப்படுத்த போவதாகவும் ராஜேந்தர் சிங் தெரிவித்தார். இந்த சந்திப்பில்  சூழலியல் செயல்பாட்டாளர் பியூஸ் மனுஷ் , பழங்குடி மக்கள் சங்க தலைவர்  முத்தம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-அருள்
nakkeeran

கருத்துகள் இல்லை: