ஞாயிறு, 17 டிசம்பர், 2017

அமெரிக்காவில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை 2,40000-மாக உள்ளது.

Veera Kumar - Oneindia Tamil வாஷிங்டன்: அமெரிக்காவிலுள்ள மக்களில் எத்தனை பேர் தமிழ் பேசுபவர்கள் என்பது குறித்த விவரத்தை அந்த நாட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவு சேகரித்துள்ளது. தெற்காசிய நாட்டை சேர்ந்தவர்களை அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் சரியாக கணக்கெடுத்தது கிடையாது. குழப்பமான முடிவுகள்தான் இதுவரையிலான கணக்கெடுப்புகளின்போது மிஞ்சின. ஆனால், இப்போது தெற்காசியர்களின் எண்ணிக்கை, அமெரிக்காவில் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் குறித்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 
 
முக்கிய பிரமுகர்கள் பூர்வீகம் முக்கிய பிரமுகர்கள் பூர்வீகம் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க நாட்டுக்கான தூதரான நிக்கி ஹாலே, பெற்றோர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். 
அடோப் தலைமைச் செயல் அதிகாரி சாந்தனு நாராயண் மற்றும் மைக்ரோசாப்ட்டின், சத்யா நாதெல்லா ஆகியோர் ஹைதராபாத்தை சேர்ந்த அமெரிக்க வாழ் பிரபலங்கள். 
 
தெலுங்கு அவர்கள் தாய் மொழி. அமெரிக்காவில் புகழ் பெற்ற தமிழர்கள் அமெரிக்காவில் புகழ் பெற்ற தமிழர்கள் நகைச்சுவை நடிகர் ஆசிஸ் அன்சாரியின் பெற்றோர் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஒரு தமிழர். சென்னையில் வளர்ந்தவர். அமெரிக்க தமிழர்கள் எண்ணிக்கை அமெரிக்க தமிழர்கள் எண்ணிக்கை உலக அளவில் 7 கோடி பேரால் தமிழ் பேசப்படுகிறது. அமெரிக்காவில் வசிப்போரில் சுமார் 2,50,000 பேர் தமிழை தாய்மொழியாக கொண்டுள்ளார்கள். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவில் ஆங்கிலம், பிரெஞ்சு தவிர்த்து வேறு எந்தெந்த மொழிகள் எவ்வளவு மக்களால் பேசப்படுகிறது என்பது குறித்த அந்த புள்ளி விவரத்தை நீங்களும் பாருங்கள். சைனீஸ் முதலிடம் சைனீஸ் முதலிடம் இந்த பட்டியலில் சைனீஸ் மொழிக்குதான் முதலிடம். 
 
அமெரிக்காவில் சுமார் 3.17 மில்லியன் மக்கள் சைனீஸ் மொழி பேசுகிறார்கள். தகலாக் 1.68 மில்லியன் மக்களாலும், வியட்னாமீஸ் 1.45 லட்சம் மக்களாலும், பிரெஞ்சு 1.22 மில்லியன் மக்களாலும், கொரியன் 1.1 மில்லியன் மக்களாலும் பேசப்படுகிறது. 
அரபு, ஹிந்தி அரபு, ஹிந்தி அமெரிக்காவில் அரபு மொழி பேசுவோர் எண்ணிக்கை 1.09 மில்லியனாக உள்ளது. 
ஜெர்மன் சுமார் 0.96 மில்லியன் மக்களாலும், 
ரஷ்யன் 0.9 மில்லியன் மக்களாலும் பேசப்படுகிறரது.
 ஹிந்தி 0.74 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. 
உருது பேசுவோர் எண்ணிக்கை 0.45 மில்லியனாகும். 
ஆச்சரியம் என்னவென்றால் குஜராத்தி பேசுவோர் எண்ணிக்கை 4 லட்சமாம். தமிழ், தெலுங்கு தமிழ், தெலுங்கு தெலுங்கு பேசுவோர் எண்ணிக்கை 3,20,000மாக உள்ள நிலையில், பெங்காளியை தாய் மொழியாக கொண்டவர் எண்ணிக்கை 3 லட்சம். 
பஞ்சாபி பேசுவோர் எண்ணிக்கை 2,80000 என்ற அளவில் உள்ள நிலையில், தமிழ்
தமிழ் பேசுவோர் எண்ணிக்கை 2,40000-மாக உள்ளது. ஹீப்ரு 2.1 லட்சம் மக்களால் பேசப்படுகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/international/the-us-census-is-finally-counting-how-many-people-speak-tami/articlecontent-pf280715-304693.html
 

/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: