செவ்வாய், 19 டிசம்பர், 2017

ஆர்.கே.நகர் தேர்தல் நாளான டிசம்பர் 21ஆம் தேதிதான் 2 ஜி வழக்கிலும் தீர்ப்புக்கு நாள்

மின்னம்பலம் :“ஆர்.கே.நகர் தேர்தல் நாளான டிசம்பர் 21ஆம் தேதிதான் 2 ஜி வழக்கிலும் தீர்ப்புக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது. 2 ஜி வழக்கின் தீர்ப்பைப் பொறுத்தவரை திமுக தரப்பில் எந்தக் கலக்கமும் இல்லை. முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், துரைமுருகன், பொன்முடி ஆகிய நான்கு பேரையும் தலைமைக் கழகம் சார்பாக நாளையே டெல்லி கிளம்பச் சொல்லிவிட்டாராம் ஸ்டாலின். தீர்ப்பு வரும் நாளில் அவர்கள் நால்வரையும் சிபிஐ கோர்ட்டுக்குப் போகச் சொல்லி இருக்கிறார். திமுக தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாகவே நான்கு பேரை டெல்லிக்கு ஸ்டாலின் அனுப்பி வைத்திருக்கிறார்.
‘இரு தினங்களுக்கு முன்பு பிஜேபி பிரமுகர்கள் சிலர் எங்கள் தளபதியைத் தொடர்பு கொண்டு பேசினார்கள். ‘ஆர்.கே.நகரில் நீங்கள் எடுத்த முடிவு ஜனநாயகத்தைக் காக்கும் முடிவு. ஓட்டுக்குப் பணம் கொடுக்க மாட்டோம் என்பதில் கடைசி வரை உறுதியாக நின்றீர்கள். அதற்கு வாழ்த்துக்கள். உங்களையும் உங்களது பிரசாரத்தையும், செயல்பாடுகளையும் நாங்க கவனிச்சிக்கிட்டுதான் இருக்கோம். சிறப்பாக செயல்படுறீங்க. 2 ஜி தொடர்பான வழக்கில் தீர்ப்பும் வரப் போகிறது. ஆ.ராசா, கனிமொழி விடுதலை ஆவார்கள், திமுக மீது சுமத்தப்பட்ட களங்கம் தீரப் போகிறது. அதற்கும் முன்கூட்டியே உங்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லிவிடுகிறோம்’ என்று சொன்னார்கள். ஆக, 2 ஜி வழக்கைப் பொறுத்தவரை விடுதலை ஆகப் போகிறோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’ என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.

“பிஜேபிக்கு என்ன திடீரென திமுக மீது கரிசனம்?” என்ற கேள்வியை போட்டது ஃபேஸ்புக். பதிலை அடுத்த மெசேஜ் ஆகப் போட்டது வாட்ஸ் அப்.
“தமிழகத்தில் இனி அதிமுகவை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டது பிஜேபி. அதிமுக என்ற மண்குதிரையை நம்பி பயணம் செய்தால், நமக்கு இருக்கும் செல்வாக்கும் போய்விடும் என தமிழகத்தில் உள்ள பிஜேபி பிரமுகர்கள் டெல்லிக்குச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் எப்படியாவது அடுத்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி என்பது பிஜேபியின் ஆசையாகிவிட்டது. அதை நோக்கித்தான் காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறது பிஜேபி. 2 ஜி வழக்கிலும் திமுக விடுதலை ஆகிவிட்டால், அதன் பிறகு ஊழல் கட்சி என யாரும் திமுகவை விமர்சனம் செய்ய மாட்டார்கள். அப்போது திமுகவுடன் கூட்டணி என்றாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனத் தமிழகத்தில் உள்ள பிஜேபி பிரமுகர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
டெல்லியிலும் கிரீன் சிக்னல் கிடைக்க, ஸ்டாலின் வீட்டில் உள்ள முக்கியப் பிரமுகர் ஒருவர் மூலமாக பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறது. குஜராத்திலும் இமாச்சல் பிரதேசத்திலும் பிஜேபி ஆட்சியைப் பிடித்துவிட்டதால், மக்களுக்கு பிஜேபி மீதுள்ள நம்பிக்கை குறையவில்லை என்றும் லேட்டஸ்ட் உதாரணங்களை காட்டியிருக்கிறார்கள்” என்று முடிந்தது பதில் மெசேஜ்.
இரண்டு மெசேஜ்களையும் காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது.
“கன்னியாகுமரியில் ஓகி புயல் பாதிப்பை பார்வையிடப் பிரதமர் வந்திருந்தார். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் என எல்லோரும் கன்னியாகுமரிக்குப் போயிருந்தார்கள். தம்பிதுரையும் டெல்லியிலிருந்து நேராக கன்னியாகுமரி வந்துவிட்டார். பொன்.ராதாகிருஷ்ணன், அங்கே வந்திருந்த எடப்பாடியிடம் வந்து பேசியபோதும், முதல்வர் முகம் கொடுத்துப் பேசவே இல்லையாம். ‘ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓய மாட்டோம்’னு பொன்.ராதாகிருஷ்ணன் ஆர்.கே.நகரில் பேசினாரு. இதெல்லாம் எந்த விதத்தில் நியாயம்னு பிரதமர்கிட்ட கேளுங்க. அவங்க சொல்றதை நாம கேட்டுட்டுதானே இருக்கோம். அப்புறம் எதுக்காக இப்படி பேசுறாங்க...’ என தம்பிதுரையிடம் சொல்லி இருக்கிறார் எடப்பாடி. இந்த விஷயத்தை தம்பிதுரையும் பிரதமரிடம் சொல்லிவிட்டாராம். பதில் எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டியிருக்கிறார் பிரதமர் ” என்பது

கருத்துகள் இல்லை: