சனி, 23 டிசம்பர், 2017

ஜெயலலிதா அம்ருதாவுடன் பலதடவை தொலைபேசியில் பேசிய ஆதாரங்கள் உள்ளன ... நீதிமன்றத்தில் வழக்கறிஞர்

தினகரன் :சென்னை: ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் தொடர்கிறது என்று கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம், அம்ருதா தனது தந்தை சோபன்பாபு என்று அறிவிக்கக் கோருவதில் என்ன சிக்கல் உள்ளது என்று கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், இந்த வழக்கில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பதில் தருமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி நீர்சத்து இல்லாத காரணத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுமார் 75 நாட்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் ேததி அவர் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்தது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் அவரை மருத்துவமனையில் பார்த்ததாக கூறிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் அவரை பார்க்கவில்லை என்று பின்னர் தெரிவித்தனர். தற்போது துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்நிலையில், ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான் என்று பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா (36), உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றங்களை அணுகுமாறு உத்தரவிட்டது.


 இதையடுத்து, அம்ருதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “ஜெயலலிதா எனது தாய் என்பது அவர் இறந்த பிறகுதான் எனக்கு தெரியும். எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என  கருதி என்னை  யாருக்கும் தெரியாமல் மறைத்து என்னை எனது உறவினர்கள் வளர்த்தனர். என்னை  வளர்த்த சைலஜாதான் எனது தாயார் என்று இதுவரை நினைத்தேன். ஆனால், ஜெயலலிதாவின் மகள்தான் என்று என்னை வளர்த்தவர்கள் தெரிவித்தனர். முன்னதாகவே தெரவித்தால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அவர்கள் இந்த உண்மையை மறைத்துள்ளனர். எனவே, ஜெயலலிதா தான் எனது தாய் என்று நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், டிஎன்ஏ பரிசோதனை நடத்தக் கோருகிறேன். நான் ஜெயலலிதாவின் மகள் என்பது தமிழக அரசின் முக்கிய பொறுப்பில் உள்ள சிலருக்கு தெரியும்.

 இந்த மனுவை தாக்கல் செய்ததன் மூலம்  ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயல்வதாக நினைக்க வேண்டாம். எனது தாயாரின் ஆன்மா சாந்தியடைய அவரது உடலுக்கு எங்களது குல வழக்கப்படி இறுதிச்சடங்கு மரியாதைகளை செய்ய வேண்டும். இதற்கு அனுமதி கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, என்னை அவரது மகள் என்பதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிடவும், இறுதிச்சடங்கு மரியாதைகளை செய்யவும் அனுமதிக்க வேண்டும்’’ என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஏன் டிஎன்ஏ சோதனை நடத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஜெயலலிதாவை தனது தாய் என்று உத்தரவிடக்கோரும் மனுதாரர் தனது மனுவில் சோபன்பாபுவை தனது தந்தையாக அறிவிக்கக் கோருவதற்கு என்ன தடை உள்ளது என்றார். அதற்கு அம்ருதா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வி.பிரகாஷ், இந்த வழக்கு மனுதாரர் ஜெயலலிதா தனது தாய் என்று அறிவிக்க மட்டும் கோரியுள்ளார். அவரது தந்தை குறித்து பின்னர் தெரிவிக்கிறோம் என்றார். அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய நாராயண் ஆஜராகி, ‘எந்த ஒரு ஆதாரமும், முகாந்திரமும் இல்லாமல் டிஎன்ஏ சோதனை நடத்த உத்தரவிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெரிவித்துள்ளது. எனவே, முதலில் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவு செய்த பிறகு வழக்கை விசாரிக்க வேண்டும். மனுதாரரிடம் குறைந்தபட்சம்  ஜெயலலிதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கூட இல்லை. ஒருவேளை அவரிடம் இருந்தால் அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யட்டும்.

 எனவே, ஜெயலலிதாவின் டிஎன்ஏவை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று வாதிட்டார்.
இதைக்கேட்ட நீதிபதி, ஜெயலலிதாவின் வாரிசு என உரிமை கோரும் பிரச்னைக்கு இந்த வழக்குடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விரும்புகிறேன். ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எதுவும் அப்போலோ மருத்துவமனையில் உள்ளதா? என்று அட்வகேட் ஜெனரலிடம் கேட்டார். அதற்கு அட்வகேட் ஜெனரல், டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவிட்டால் அது தமிழகத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்திவிடும். உறுதியான ஆதாரம் இருந்தால் மட்டுமே இதுபோன்ற சோதனைக்கு உத்தரவிட முடியும். இறந்துபோனவரின் உடலைச் சோதனை செய்வது கூட அது தனிப்பட்ட அந்தரங்கத்தில் தலையிடுவது போன்றதுதான். மனுதாரர் கற்பனை அடிப்படையில் கதை கூறுகிறார் என்றார்.

அப்போது, அம்ருதாவின் வக்கீல் பிரகாஷ், ஜெயலலிதாவுடன் மனுதாரர் பல நேரங்களில் தொலைபேசியில் பேசியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், ஜெயலலிதாவை போயஸ் கார்டனிலும் மனுதாரர் சந்தித்துள்ளார். போயஸ் கார்டனில் உள்ள பார்வையாளர்கள் பதிவேட்டில் அது பதிவு ெசய்யப்பட்டிருக்கும் என்றார்.  இதைக்கேட்ட நீதிபதி, ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது அவரை அம்மா, அம்மா என்று அழைத்தவர்கள் தற்போது பெயர் சொல்லி அழைக்கிறார்கள். அவர் உயிரோடு இருக்கும்போது அம்மா என்று அழைக்காத மனுதாரர் ஜெயலலிதா இறந்தபிறகு அவரை அம்மா என்று அழைக்கிறார். அம்மா என்ற உரிமையைக் கோரியும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரை அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்கூட பார்க்கவில்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. காலையில் மாலை போட்டவர்கள் மாலையில் காலை வாரிவிடும் நிலைதான் தற்போது நடந்து வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் ஜெயலலிதாவின் உறவினர்களான  தீபா, தீபக் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

மெரீனாவில் விசாரணை நடத்தலாமா?: அம்ருதா மனு விசாரணைக்கு வந்தபோது, ஜோசப் என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகி, தன்னை இந்த வழக்கில் சேர்க்குமாறு கோரினார். அவரிடம் நீதிபதி, ‘உங்களுக்கு என்ன சம்மந்தம் உள்ளது’ என்றார். அதற்கு ஜோசப், ‘ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என்றார்.  இதைக்கேட்ட நீதிபதி, ‘தமிழகத்தில் உள்ள மக்கள் தொகை என்ன’ என்று கேட்டார். அதற்கு ஜோசப், 6 கோடி என்றார். உடனே நீதிபதி, ‘ஆறு கோடி பேரும் வழக்கு தொடர்ந்தால் விசாரணையை மெரினா கடற்கரையில்தான் நடத்த வேண்டும். நீங்கள் மனுத் தாக்கல் செய்யுங்கள். அது விசாரணைக்கு உகந்ததா என்று பின்னர் முடிவு ெசய்யப்படும்’ என்றா

கருத்துகள் இல்லை: