திங்கள், 25 செப்டம்பர், 2017

நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம் .. மருத்துவ மனை அறிக்கை

tamil.oneindia.com  : veerakumaran. சசிகலா கணவர்
நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்-வீடியோ சசிகலா கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழந்ததால் நடராஜன், சென்னையிலுள்ள கிளனேஜல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பதால் அதற்கான தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக சசிகலாவின் சகோதரி மகனான டிடிவி தினகரன் கூறிவந்தார். மருத்துவமனை அறிக்கை இந்த நிலையில், நடராஜன் (74) உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நடராஜன் உடல்நிலை குறித்து தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளதாக பார்க்கப்படுகிறது.< நடராஜன் கவலைக்கிடம் அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 9 மாதங்களாக கல்லீரல் மற்றும் கிட்னி பிரச்னைகளுக்காக நடராஜன் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் கல்லீரலில் ஏற்பட்டுள்ள மோசமான பிரச்சினையால், கல்லீரல் இன்டன்சிவ் கேர் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் பாதிப்பும் அவருக்கு உள்ளதால், நடராஜன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தற்போது அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்படவில்லை. குடும்பத்தாருக்கு தகவல் கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவர் காத்திக்கிறார். நடராஜன் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் நடராஜனின் உடல்நிலை குறித்து அறிந்துள்ளனர்.

 டாக்டர்கள் குழு முகமது ரெலா தலைமையிலான மருத்துவர் குழு நடராஜனுக்கு சிகிச்சையளித்து வருகிறது. இவ்வாறு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லீரல் பிரிவின் இயக்குநர் டாக்டர் இளங்குமரன் இந்த அறிக்கையை வெளியிடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: