புதன், 27 செப்டம்பர், 2017

சீமான் :கானா பாடல்களால் தான் தமிழ் சிதைகிறது... சமுகவலையில் வறுபடும் சீ... மான்!

"தாவரமில்லை, தனக்கொரு வீடில்லை. தேவாரம் எதுக்கடி குதம்பாய். தேவாரம் எதுக்கடி குதம்பாய்"ன்னு தேவாரத்தை காறி துப்பிய குதம்பை சித்தர் தமிழரா இல்லியா?? .. .
Devi Somasundaram : கானா பாடல்களால் தான் தமிழ் சிதைகிறது ..எங்கள் தாய் மொழியை நரிகுறவர் பாஷை ஆக்கிடாதிங்கன்னு சீமான் சொன்னதா ஒரு தகவல் உளவுது. .அது உண்மை என்றால் .
நரி குறவர் பாஷை எந்த விதத்தில் தாழ்ந்தது ? ...சமஸ்கிருதம் பேசும் பாப்பான் தமிழன்..நரி குறவர் தமிழர் இல்லியா?? வள்ளி குறத்தியை மணந்த முப்பாட்டன் முருகன் தமிழனா இல்லியா? ...எத்தனை பேர் தொட்ட முலை. எத்தனை பேர் நட்ட குழி .எத்தனை பேர் பற்றி இழுத்த உதடு என்று எழுதிய பாடல்கள். தமிழில் ஏராளம்..அவை தமிழை சிதைத்து விடவில்லயா? ..
பாசுரங்கள்.தேவார திருபதிகங்கள் என்ற மேட்டுகுடி பாடல்கள் தான் தமிழை வாழ வைக்க போகிறதா....
"தாவரமில்லை, தனக்கொரு வீடில்லை.
தேவாரம் எதுக்கடி குதம்பாய். தேவாரம் எதுக்கடி குதம்பாய்"ன்னு தேவாரத்தை காறி துப்பிய குதம்பை சித்தர் தமிழரா இல்லியா?? .. .

.. நாட்டுபுற கிராமிய பாடல்கள் வார்த்தை ஜாலமற்ற எளிய மக்க்களின் கலை. கோபம், ஆசை, வெறுப்பு, அன்பு என்று அன்றாட உணர்வை, நிகழ்வை எளிய வார்த்தைகளில் பேசுவது எளிய மக்களின் கலை...கலையில் தரம் பார்ப்பவன் கலை அறியாத மூடன்..
குழந்தை வயிற்றில் உதைத்து ஆடியதை நடனமாக பார்த்த இஸட்டரோ டங்கனை ரசிக்க தெரிவது மட்டும் ரசிப்பு இல்லை..வயசான தாத்தா பாட்டி மரணத்தையும் கொண்டாடும் மரண நிகழ்வில் ஆடும் கூத்தும் கலை தான் ...
சமிபத்தில் தன் தாயின் மரணதில் போது பரதம் ஆடிய பிர்லா சயண்டிஸ்ட் அனைவரும் அறிந்ததே. ...அதை யாரும் கேலியாக பார்க்காமல் போக என்ன காரணம்...மேட்டுகுடி. எதை செய்தாலும். அது அழகானது என்ற நம் மக்களின் சமுக பொது புத்தி ..கானா பாடல்களை விமர்சிப்பதும்...
கலை ரசிப்பதற்காக மட்டுமே....அதில் விமர்சிக்க ஏதுமில்லை.
. ஹிந்துல நடுபக்கம் கட்டுரை எழுதும் சுப்புடு தனம் பாராட்ட படுவதை எல்லாம் ரசிக்க எனக்கு பொறுமை இருப்பதில்லை.

கருத்துகள் இல்லை: