வியாழன், 28 செப்டம்பர், 2017

ஜெ.மரணத்தில் அமைச்சர்களுக்குப் பங்கு: புகழேந்தி

மின்னம்பலம்:  ஜெயலலிதா மரணத்தில் தமிழக அமைச்சர்களுக்கு பங்கு உள்ளது. எனவே, அமைச்சர்களிடம் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஜெ.மரணத்தில் அமைச்சர்களுக்குப் பங்கு:  புகழேந்திதிருவண்ணாமலையில் தினகரன் அணி சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கையெழுத்து நான் போடவில்லை இளவரசிக்கு தான் ஜாமீன் கையெழுத்திட்டேன். ஜெயலலிதாவை கண் இமை போல சசிகலா காத்தார்.

முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் அதிமுகவை பிஜேபியிடம் அடமானம் வைத்துள்ளனர். லயோலா கல்லூரி சர்வே செய்ததில் தினகரனுக்கு 77 சதவீதம் ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. தினகரன் ஒரு சின்ன எம்.ஜி.ஆர். எடப்பாடி பின்னால் அமைச்சர்களை தவிர யாரும் இல்லை.
இந்த ஆட்சி உருண்டு கொண்டிருக்கிறது. கொள்ளையடிக்கும் பணம் கொல்லைபுறமாக ஓடிவிடும். நாஞ்சில் சம்பத் மீது 12 வழக்கு போட்டுள்ளனர். தற்போது எதிர்கட்சி திமுக இல்லை. தினகரன் அணிதான் எதிர்க்கட்சியாக உள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா அளித்த திட்டங்கள் எதுவும் இல்லை. மக்கள் ஆதரவுடன் டிடி.வி. தினகரன் ஆட்சியை பிடிப்பார் என்று அவர் தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்துக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசின் விசாரணை கமி‌ஷன் வேண்டும் என்று தெரிவித்தார்.ஆனால், என்னை பொறுத்தவரை சி.பி.ஐ. விசாரணை வேண்டும்.
முதலமைச்சர் நாற்காலி ஆடிக்கொண்டிருக்கிறது. கட்சி தாவல் தடை சட்டத்தை சபாநாயகர் பயன்படுத்தி இருக்கிறார். சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தபோது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் அவரை காப்பாற்றினார்கள். அந்த நன்றி கூட அவரிடம் இல்லை.
தமிழக அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள். அதை வைத்து பார்க்கப்போனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் தமிழக அமைச்சர்களுக்கு பங்கு உள்ளது. எனவே, சி.பி.ஐ. அவர்களை விசாரிக்க வேண்டும்.
நடராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தொடர்பாக சசிகலாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், பரோலில் வந்து பார்க்க விரும்பினால் நாங்கள் பரோலுக்கு விண்ணப்பிப்போம். டெல்லி அரசியல் தமிழகத்தில் எதிரொலிப்பதாக கருதுகிறேன். தமிழகத்தில் தேர்தல் வர வாய்ப்புள்ளது. டி.டி.வி. தினகரன் தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: