வெள்ளி, 29 செப்டம்பர், 2017

திரு.வீரமணி : ரஜினியும் கமலும் பாஜகவுக்கு பாதை போடும் முயற்சியில் மும்மரம் !


ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவதாகக் கூறி பாஜகவுக்கு பாதைபோட முயற்சி செய்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றுவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சந்தேகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக  அவர் விடுத்துள்ள அறிக்கை… பகுத்தறிவுவாதி என்பவர் இப்படியென்றால், அவன் இருக்கான் - எல்லாம் அவன் பார்த்துப்பான் என்று சொல்லுகிற ரஜினிகாந்த் ஆட்சி அதிகாரப் பீடத்தில் அமர ஆசைப்படுகிறார். சர்வமும் சர்வேசன் மயம் என்று சொல்லி கடவுளைக் கைகாட்டிவிடுவார். ஆண்டவன் சொல்றான் - அடியேன் செய்கிறான் என்று சுலபமாக சொல்லிவிடுவாரே?
இது தமிழ்நாட்டில் எடுபடுமா? தமிழ்நாட்டுக்காக இதுவரை அவர் என்ன செய்திருக்கிறார்?
அவரின் முதலீடுகள் எல்லாம் எந்த மாநிலத்தில் என்ற கேள்விகள்  அவரைத் துரத்திக் கொண்டே இருக்குமே! இவற்றை எல்லாம் தாக்குப் பிடிக்கும் இயல்பை - திறனைக் கொண்டவரா ரஜினிகாந்த்?
;தமிழ்நாட்டில் 1967 முதல் தி.மு.க ஆட்சியும், அண்ணா பெயரில் அ.இ.அ.தி.மு.க.வும் ஆட்சி நடத்தி வந்துள்ளன. செல்வி ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு, மரணத்தைத் தழுவிய நிலையில் அ.இ.அ.தி.மு.க பிளவுபட்டு, பலகீன நோயால் படுக்கையில் விழுந்துவிட்டது.பா.ஜ.க.வுக்கு வழிவகுக்கவா?


ஏதோ தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்ற நினைப்பில் பா.ஜ.க. என்னும் பாசிச பாம்பு அரியணை ஏற குறுக்கு வழியைத் தேடும் தருணத்தில், இரு முன்னணி சினிமா நடிகர்களும் திராவிட இயக்கத்தைப் பலகீனப்படுத்தி, வாக்குகளைச் சிதறச் செய்து அதன் மூலம் பா.ஜ.க.வைப் பதவி நாற்காலியில் அமர வைக்கும் குறுக்குவழி  இதன் பின்னணியில் இருக்கிறதோ என்ற ஒரு கருத்தும்கூட உள்ளது. மனக்கோட்டை கட்டுவதற்கு யாருக்கும் உரிமை உண்டு.

;அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட நிலைக்கு நடிகர்கள் ஆளாக வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள். தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் உருவாக்கி வைத்துள்ள அடிப்படைக் கட்டுமானத்துக்குச் சேதம் விளைவிக்க காவிகள் வந்தாலும், அரிதாரங்கள் வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள், கற்பிக்கவேண்டும்; இதில் இப்போது ஏமாந்து விட்டால், இன்னும் எழ, மீள மேலும் 25 ஆண்டுகள் ஆகும்!

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது!

;சமூகநீதி, மதச்சார்பின்மை சக்திகள் வேறு எப்பொழுதையும்விட விழிப்புடன்  ஒன்றுபட்டு நிற்கும் காலகட்டம் இது என்பதையும் நினைவூட்டுகிறோம். தலைவலி போய் திருகுவலிக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. மாற்றந்தான் வரட்டுமே - அதையும்தான் பார்ப்போமே என்ற சிறுபிள்ளைத்தனமான நினைப்பும், நடப்பும் நாட்டை நாசப்படுத்திவிடும் - மத்தியில் அப்படித்தான் நடந்து நாடு காடாகியிருக்கிறது.&n>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.;/ நக்கீரன்

கருத்துகள் இல்லை: