திங்கள், 25 செப்டம்பர், 2017

BBC : ஜெர்மனியில் நான்காம் முறையாக ஆட்சியை பிடிக்கிறார் மெர்கல்

Exit polls in the German federal elections put Angela Merkel's CDU party in the lead, while the far-right Alternative for ...
ஜெர்மனியின் சான்சலர் ஏங்கெலா மெர்கல் நான்காவது முறையாக ஆட்சியைப் பிடிப்பார் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஏங்கெலா மெர்கலின் கன்சர்வேட்டிவ் கூட்டணியான சிடியூ/சிஎஸ்யூ 32.5% ஓட்டுகளைப் பெற்று, ஜெர்மனி நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைக் கொண்ட கட்சியாக தொடந்து நீடிக்கும் என ஏஆர்டி கருத்துக்கணிக்கு தெரிவித்துள்ளது. அவரது முன்னாள் கூட்டணிக் கட்சியான எஸ்பிடி 20% ஓட்டுகளைப் பெற்று, பிரதான எதிர்க்கட்சியாக அமரப் போகிறது. இந்நிலையில், வலதுசாரி தேசியவாத கட்சியும், முஸ்லிம் விரோத கட்சியுமான ஏஃப்டி 13.5% ஓட்டுகளை பெற்று, ஜெர்மனியின் மூன்றாவது வலுவான கட்சியாக உருவெடுத்திருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


அந்தக் கட்சி சுமார் 88-89 இடங்களில் வெல்லும் வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் கூறுகின்றன. ஆதரவாளர்களிடம் பேசிய மெர்கல், "சிறந்த முடிவை" எதிர்பார்த்ததாகக் கூறினார், மேலும் "அசாதாரண சவால்கள்" குறித்தும் பேசினார். ஏஃப்டி கட்சிக்கு ஓட்டளித்தவர்களின் "கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகள்" குறித்தும் தான் கேட்கவிருப்பதாக அவர் கூறினார்.


கருத்துக் கணிப்பில் எடுப்பில் வெளியான முடிவுகளை விட ஏஎஃப்டி கட்சி தற்போது சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ளது. இதன்மூலம் வலதுசாரி கட்சியான ஏஎஃப்டி கட்சி முதல் முறையாக ஜெர்மனி நாடாளுமன்றத்திற்குள் நுழைய உள்ளது. ஜெர்மனி ஒப்பிடமுடியாத,"அரசியல் நிலநடுக்கத்தை" எதிர்கொண்டுள்ளதாக வலதுசாரி கட்சியின் தலைவரான ஃப்ராக்கே பெட்ரி டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
மெர்கல் தற்போது புதிய கூட்டணியை தேட வேண்டியதிருக்கும். இதற்கான பணிகள் முடிய சில மாதங்கள் ஆகலாம்.
இதற்கு என்ன அரத்தம்?
நான்காவது முறையாக மெர்கல் ஆட்சியைப் பிடித்தாலும்,, இதுவரை பெற்ற வெற்றிகளில் மிக மோசமான வெற்றியாக இது பார்க்கப்படுவதாக பிபிசி பெர்லின் செய்தியாளர் ஜென்னி ஹில் கூறுகிறார்.
பெருமளவிலான குடியேறிகளை நாட்டுக்குள் அனுமதித்ததற்காக அவர் தண்டிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார். ஆனால், மெர்கலின் பிரசாரக் குழு, இதை மிகவும் தாமதமாகவே உணர்ந்ததாகவும் கூறுகிறார்.
வாக்காளர்கள் தனக்கு ஆதரவாகத் திரள வேண்டும் என்று மெர்கல் கேட்டுக் கொண்டாலும் அது நடக்கவில்லை என்றும் பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், எஃப்டிபி மற்றும் கிரீன்ஸ் ஆகிய இரு கட்சிகளுடன் மெர்கல் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், தங்கள் கட்சிக்கும் மெர்கல் கூட்டணி மற்றும் எஃப்டிபி கட்சிகளுக்கும் இடையே பெருத்த வேறுபாடுகள் இருப்பதாக கிரீன் கட்சியின் மூத்த தலைவர் விர்ஃபிரிட் ரெட்ஸ்மென் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், யாராவது ஒருவர் ஆட்சியை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: