திங்கள், 25 செப்டம்பர், 2017

எல்லா நிறங்களுக்குள்ளும் காவி ஒளிந்திருக்கலாம். போலியான புரட்சியாளர்களும்.....

Don Ashok : காங்கிரஸ் ஆட்சி நடந்த காலங்களிலும் மத்திய அரசு மாநில உரிமைகளை பின்னுக்குத் தள்ளுவதில் ஆர்வமாகவே இருந்தது. ஆனால் இன்றைய பாஜக அரசோ ஏதேச்சிகார, பேரரசுவாத அரசாக (imperialistic) திகழ்கிறது. மாநிலங்கள் அனைத்துமே மத்திய அரசுக்கு எதிரான ஒரு சுதந்திரபோராட்ட காலத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. இன்றைய தேதியில் மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்கவும், அதற்கு எதிராக செயல்படுவதென்பதும் வெள்ளைக்காரர்களை எதிர்த்து கேள்வி கேட்பதைப் போன்ற செயல். அப்படியான செயலைச் செய்கின்றவர்களைத் தான் குறைந்தபட்சம் அரசியல் அறிவு உள்ளவர்களாகக் கொள்ளமுடியுமே தவிர, முதலாளிக்கு சலாம் போட்டுவிட்டு தொழிலாளியிடம் மூர்க்கத்தனத்தையும், வார்த்தை ஜாலத்தையும் காட்டும் கமல் போன்ற முட்டாள்களை எல்லாம் ஒரு அரசியல் மாற்றமாக எண்ணுவதென்பது, ப்ரிட்டிஷ் மகாராணியிடம் இருந்து அவரால் நியமிக்கப்பட்ட வைஸ்ராய் நமக்கு விடுதலை வாங்கித் தருவார் என எண்ணுவதைப் போன்றது.

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் இங்கிருந்து எழும் மத்திய அரசுக்கு எதிரான குரல்களையும் நாம் மிகக்கவனமாகவே கையாள வேண்டும். எப்போதுமே உண்மையான போராட்டத்திற்கான தேவை இருக்கும்போது அதை நீர்த்துப் போகச் செய்ய போலியான போராளிகளை மத்திய அரசே உருவாக்கும். அவர்கள் ஆளுக்கு முன்னால் கத்துவார்கள். அவர்களை மத்திய அரசு தனக்கு மிகப்பெரிய எதிரியாக சித்தரிக்கும். அவர்கள் க்ளாஸுக்கு லேட்டாக வந்தாலே மத்திய அரசு அவர்களுக்கு நூறு கசையடிகளைக் கொடுத்து நம்முன் அவர்களை தியாகிகளாக முன்னிறுத்தி நம்பவைக்கும்.
நண்பர்களே நாம் மிகவும் கவனமாக, தெளிவாக இருக்க வேண்டிய காலமிது. எல்லா நிறங்களுக்குள்ளும் காவி ஒளிந்திருக்கலாம். போலியான புரட்சியாளர்களும், அவர்களால் முன்னெடுக்கப்படும் போலியான புரட்சிகளும் தலைமுறை தலைமுறையாக நம்மை அடிமைப்படுத்தவல்லது. கவனம்.
-டான் அசோக்

கருத்துகள் இல்லை: