ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

ஜெர்மனிக்கு செல்பவர்கள் கவனம் .... ஆர் எஸ் எஸ் / நாசி பாணி வணக்கங்கள் வேடிக்கைகாக செய்தாலும் கடும் தண்டனை!

subashini.thf: ஜெர்மனிக்குச் சுற்றிப் பார்க்க வரும்
மக்களே.. உங்கள் கவனத்திற்கு..
பெர்லின் போகும் போதோ அல்லது வேறெங்காவது அரச அலுவலகங்களின் முன் நின்று செய்யக்கூடாத ஒரு வேலை என்னவென்றால் ஹிட்லர் ஸ்டைலில் சல்யூட்டை செய்து காட்டுவது. படம் பிடித்துக் கொள்வதற்காக செய்தேன் எனச் சொன்னாலும் தண்டனை நிச்சயமாகக் கிடைக்கும். அண்மையில் இரண்டு சீனச் சுற்றுப் பயணிகள் பெர்லினுக்குச் சென்று பார்லிமண்ட் முன் நின்று கொண்டு ஹிட்லர் மாதிரி சல்யூட் வைத்து படம் பிடித்திருக்கின்றனர். அவர்களைப் போலீசார் கைது செய்து அபராதமாக ஒருவருக்கு 500 யூரோ எனத் தீட்டிவிட்டார்கள். ஆக.. படம் பிடிக்கும் போது சிரித்துக் கொண்டு நின்றோ அமர்ந்தோ சாய்ந்தோ எடுத்துக் கொள்ளுங்கள். ஹிட்லர் போஸ் எல்லாம் வேண்டாம்.. பத்திரம்.. பத்திரம்.
ஆனாலும் இந்தச் சீன, ஜப்பானிய சுற்றுப் பயணிகள் செய்யும் பல காரியஙக்ள் கோமாளித்தனத்திற்கு மேல் கோமாளித்தனமாகத்தான் இருக்கின்றது !!:-)
குறிப்பு: நாசி ஜெர்மனியில் தடைசெய்யப்பட்ட இயக்கம். அதன் சித்தாந்தங்களை வெளிப்படுத்தும் குறியீடுகளை பொது வெளியில் பயன்படுத்துவது தண்டனைக்குறிய குற்றமாகக் கருதப்படும்.

Kumaraguruparan Ramakrishnan ஜெர்மன் அரசின் எச்சரிக்கை உணர்வு பாராட்டத்தக்கது... ஆனால், இந்தியாவில் ஹிட்லர்தாசர்கள் தற்போது பெருகி வருவது ஆபத்தானது.

கருத்துகள் இல்லை: