புதன், 9 ஆகஸ்ட், 2017

அதிர்ந்தது மும்பாய் ... 10 லட்சம் பேர் ஊர்வலம் மகராஷ்டிரா மராத்தியர்களுக்கே முன்னுரிமை!


மராத்தியர்களுக்கே முன்னுரிமை கோரி 10 லட்சம்பேர் பேரணி! இந்தி மொழி என்று பாஜக ஆர்ப்பாட்டம் செய்யும் நிலையில் அந்த கட்சி ஆளும் மகாராஸ்டிரா மாநிலத்தில் 10 லட்சத்திற்கு மேற்பட்டோர் திரண்ட மராத்தியர்கள் பேரணி பிரமாண்டமாய் நடந்து முடிந்திருக்கிறது. மராத்தா மராத்தியர்களுக்கே என்ற முழக்கத்தோடு மும்பையில் நடைபெற்ற இந்த பேரணியில் வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் மராத்தியர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த ஆண்டு முழுவதும் மகாராஸ்டிராவில் 57 முறை பல்வேறு பகுதிகளில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மராத்திய மக்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். 58 வது பேரணியாக மும்பையில் இந்த பிரமாண்டமான பேரணியை நடத்தியிருக்கிறார்கள். மகாராஸ்டிராவில் வெளிமாநிலத்தவர் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கிறது. கல்வி வேலை வாய்ப்பில் அவர்களுக்கே முன்னுரிமை கிடைக்கிறது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிப்படுத்தினார்கள். இந்தப் பேரணியில் பெரும்பாலும் அமைப்புசாரா தொழிலாளர்களும், கிராமப்புற தொழிலாளர்களும் பங்கேற்றார்கள். சிவசேனா பாஜக ஆளும் இந்த மாநிலத்தில் சிவசேனாவும் பாஜகவும் வைத்திருந்த போஸ்டர்களையும் பேனர்களையும் ஊர்வலத்தில் வந்தவர்கள் கிழித்து எறிந்தனர். நக்கீரன்

கருத்துகள் இல்லை: