சனி, 12 ஆகஸ்ட், 2017

BBC :உத்தரப்பிரதேச மருத்துவமனையில் 30 குழந்தைகள் மரணம் ... ஆக்சிஜன் தட்டுப்பாடு

உத்தரபிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 25 குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர்.  உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்திலுள்ள பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுமார் 20 குழந்தைகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் முறையான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. கடந்த மூன்று நாட்களாக குறிப்பிட்ட மருத்துவமனையில் மட்டும் 30 குழந்தைகள் இறந்துள்ளதாக கோரக்பூர் மாவட்ட மஜிஸ்ரேட் ராஜ்வ் ரௌடாலே தெரிவித்திருக்கிறார். ஆனால், கோராக்பூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ரவீந்திர குமார் எறக்குறைய 20 குழந்தைகள் இறந்துள்ளதாகவும், இந்த இறப்பு ஆக்ஸிஜன் விநியோக தடையால் ஏற்படவில்லை என்றும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான என்சிபாலிட்டிஸ் எனப்படும் மூளை வீக்கத்தால் துன்பப்படுவோர் கோரக்பூர் மருத்துவ கல்லூரியின் இந்த மருத்துவமனைக்கு வருவதாகவும், அதில் பலர், குறிப்பாக குழந்தைகள் இறப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்னொரு மருத்துவமனையை சேர்ந்த பெயர் தெரிவிக்க விரும்பாத மருத்துவர் ஒருவர், இந்த மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் 8 முதல் 10 வரையான குழந்தைகள் இறப்பதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார் உத்தரப்பிரதேச மாநில அரசு தரப்பில் பதிவிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் ஆக்ஸிஜன் விநியோகம் தடைபட்டதால் ஏற்பட்டதல்ல என்றும், ஊடகங்கள் பல்வேறு வகையான செய்திகளை வெளியிட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளது. கோரக்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் தற்போது அங்குள்ள நிலைமையை கண்காணித்து வருகிறார் என்றும் உத்தரப்பிரதேச அரசு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: