மின்னம்பலம் : புதுக்கோட்டை
மாவட்டம் நெடுவாசலில் ‘ஹைட்ரோகார்பன்’ எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த
மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால், சுற்று வட்டாரப் பகுதி மக்கள்
தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல்
உள்ளது. ஆனால், ‘ஜெம் லெபரட்டரீஸ்’ நிறுவனத்தோடு ஒப்பந்தத்தை மேற்கொண்டது
மத்திய அரசு. இதையறிந்து நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள்
இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ‘ஹைட்ரோகார்பன்’ திட்டச் சோதனையை நடத்த எண்ணெய் நிறுவனத்துக்கு (ஓ.என்.ஜி.சி), மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதில் தஞ்சை மாவட்டத்தில் 5 கிணறுகளும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 கிணறுகளும், அரியலூர் மாவட்டத்தில் 6 கிணறுகளும், திருவாரூர் மாவட்டத்தில் 1 கிணறு என மொத்தம் 21 கிணறுகள் சோதனைக்காகத் தோண்டப்பட உள்ளன.
மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் ‘ஹைட்ரோகார்பன்’ திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் நடத்தவில்லை என்று எண்ணெய் நிறுவனத்துக்கு, தமிழக அரசு பிரமாணப் பத்திரம் வழங்கியதாகத் தெரிகிறது. இந்தப் பிரமாணப் பத்திரத்தைச் சுட்டிக்காட்டித்தான் மத்திய அரசிடம், எண்ணெய் நிறுவனத்தினர் ‘ஹைட்ரோகார்பன்’ சோதனைக்கான அனுமதியைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் 4 மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஆய்வு நடத்த அனுமதி வழங்கியிருப்பது விவசாயிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக