செவ்வாய், 9 மே, 2017

கீழ் நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை ...

விகடன் : தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்புகளை எழுதலாம் என உயர்நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் 1994-ம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, கடந்த 2015-ம் ஆண்டு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, கீழ் நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும், நீதிபதிகள் தமிழ் கற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கீழ் நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. வழக்கறிஞர் வசந்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. மேலும், விரிவான விசாரணைக்குப் பின்னர் வழக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது

கருத்துகள் இல்லை: