திங்கள், 8 மே, 2017

கிராமசபை தீர்மானங்களின்படி மதுக்கடைகள் திறக்கக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

கிராம சபைகளில் தங்களது பகுதிகளில் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றபட்ட பகுதிகளில், டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.>கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கடந்த டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம்  நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.தமிழகத்தில் திருவண்ணாமலை, சேலம், கரூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது, புதிய மதுக்கடைகளால் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு உள்ளது. எனவே, இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம். ஆனால், அதிகாரிகள் மதுக்கடைகளை திறக்கும் முயற்சியில் உள்ளனர். எனவே, எங்கள் பகுதிகளில் மதுக்கடைகளைத் திறக்க தடை விதிக்க வேண்டும், புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது, எந்தவித தாக்குதலிலும் காவல்துறை ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டனர்.;">மேலும், நெடுஞ்சாலைகளில் இருந்து மாற்றப்படும் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினால், அந்தப் பகுதிகளில் மதுபானக்கடைகள் திறக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
;- சி.ஜீவா பாரதி</  நக்கீரன்

கருத்துகள் இல்லை: