வெள்ளி, 12 மே, 2017

சேகர் ரெட்டிக்கு நிபந்தனை விடுப்பு!

சேகர் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்!சட்டவிரோதமாக 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிவைத்திருந்ததாக, தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை கடந்த டிசம்பர் மாதம் சிபிஐ கைதுசெய்தது.
சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர்மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ரத்தினம் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருக்கு முதலில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. சேகர்ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவருக்கும் கடந்த மார்ச் 17 ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறை சேகர் ரெட்டியிடம் விசாரணை நடத்தி, அவரைக் கைதுசெய்தது. பின்னர், அவர்கள் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை(இன்று) விசாரித்த உயர்நீதிமன்றம், சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூன்று பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் அவர்கள், டெல்லியில் தங்கியிருந்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. அதேநேரத்தில் சேகர் ரெட்டி கூட்டாளிகள் ராமச்சந்திரன், முனி ரத்தினம் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: