வெள்ளி, 12 மே, 2017

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : ரேங்க் பட்டியல் இடம் பெறவில்லை!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் 0.7% அதிகரித்துள்ளது.
1200 மதிப்பெண்ணுக்கு 1180 மதிப்பெண் மேல் 1171 பேர் பெற்றுள்ளனர். விரிவான செய்திக்கு: | 1180-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 1171 பேர் |
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தேர்வு துறை இயக்குநரகத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி, தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் இனி ரேங்க் பட்டியல் வெளியிடப்படாது என தமிழக அரசு நேற்று அறிவித்த நிலையில் முதன்முறையாக ரேங்க் பட்டியல் இல்லாத தேர்வு முடிவுகள் வெளியானது.
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 15-ம் தேதியிலிருந்து பெறலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு: | பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 15-ம் தேதியிலிருந்து பெறலாம் |
தேர்ச்சி விகிதம்:
தமிழகத்தில் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 89.3%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.5%. இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. மாணவியர் மாணவர்களைவிட 5.2% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். விரிவான செய்திக்கு: | தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 92.1% ஆக உயர்வு |
ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம்
92.1%
மாணவர்கள் தேர்ச்சி விகிதம்
89.3%
மாணவிகள் தேர்ச்சி விகிதம்
94.5%
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு
0.7% தேர்ச்சி அதிகம்
தேர்வெழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். விரிவான செய்திக்கு: | பிளஸ் 2 தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி |
பாடவாரியாக சென்டம் விவரம்:
பாடம்
200-க்கு 200 பெற்றவர்கள் எண்ணிக்கை
கணிதம்
3656
இயற்பியல்
187
வேதியியல்
1,123
கணினி அறிவியல்
1647
வணிகவியல்
8301 (அதிக அளவு முழுமதிப்பெண்)
உயிரியல்
221
தாவரவியல்
22
விலங்கியல்
4
புள்ளியியல்
68
மைக்ரோ பயாலஜி
5
கணக்கு பதிவியல்
5597
வணிக கணக்கு
2551
வரலாறு
336
பொருளாதாரம்
1717
2017 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடலூர் மாவட்டம் 84.86 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. விரிவான செய்திக்கு: | பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் கடலூர் |
2017 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 95.97 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் 74.36 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. விரிவான செய்திக்கு: | பிளஸ் 2 அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் திருவள்ளூர் |
பிளஸ் 2 தேர்வில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களில் மாணவர்கள் யாரும் 200 மதிப்பெண் பெறவில்லை. வணிகவியல் பாடத்தில் அதிகபட்சமாக 8301 பேர் 200 மதிப்பெண் பெற்றனர். விரிவான செய்திக்கு: | பிளஸ் 2 தேர்வில் மொழிப் பாடங்களில் யாரும் 200 மதிப்பெண் பெறவில்லை |
பின்தங்கும் சென்னை:
பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் சென்னை மாவட்டம் பின் தங்கியுள்ளது. மாவட்ட வாரியான தேர்ச்சி விகித பட்டியலில் 16-வது இடத்தில் உள்ளது. அதேபோல் மாவட்ட வாரியான அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்திலும் சென்னை பின்தங்கியேவுள்ளது. ஒரு அரசுப் பள்ளிகூட 100% தேர்ச்சி விகிதத்தை எட்டவில்லை.
விரிவான செய்திக்கு: | சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் எந்த அரசுப் பள்ளியிலும் 100% தேர்ச்சி இல்லை |
| பிளஸ் 2 தேர்வு முடிவு: 16-வது இடத்தில் தலைநகர் சென்னை |
முதன்முறை:
1.பிளஸ் 2 தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் முடிவுகளை அனுப்பும் முறை இந்த ஆண்டு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2.அதேபோல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் இனி ரேங்க் பட்டியல் வெளியிடப்படாது என தமிழக அரசு நேற்று அறிவித்த நிலையில் முதன்முறையாக ரேங்க் பட்டியல் இல்லாத தேர்வு முடிவுகள் வெளியானது.
3. முதல்முறையாக, பிளஸ் 2-வுக்கு மே 12-ம் தேதியும் பத்தாம் வகுப்புக்கு மே 19-ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வு தொடங்குவதற்கு முன்பே அறிவிக்கப்பட்டது.
விடைத்தாள் நகல் பெறுவது எப்படி?
விடைத்தாள் நகல் பெறவும் மறுகூட்டல் செய்யவும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்று முதல் 15-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார்.
இணையதளம் வாயிலாக:
மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிவுகளை மதிப்பெண்ணுடன் அறிந்து கொள்ளலாம்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் தேசிய தகவலியல் மையங்களிலும், மத்திய, கிளை நூலகங்களிலும் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6,737 பள்ளிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 9 லட்சம் மாணவர்கள் 2,427 மையங்களில் தேர்வெழுதினர். தனித் தேர்வர்களாக 31,843 பேரும் சிறைக் கைதிகள் 88 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகளில் 5 லட்சத்து 69 ஆயிரத்து 304 பேர் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதியவர்கள் ஆவர்.
தொடர்புடையவை  tamilthehindu.com

கருத்துகள் இல்லை: