உண்மையான தேவர் இன பெருமக்கள் யாரும் புலிப்படை கருணாஸை மதிப்பதோ, ஒரு பொருட்டாகவோ எடுத்துக் கொள்வதே இல்லை.
காரணம் அவர் திரையுலகில் யாரையும் வாழவிட்டதே இல்லை. நடிகர் கஞ்சா கருப்பை இவர் படுத்தியபாடு அதிகம்.
பாலாவிடம் நான்தான் அறிமுகம் செய்தேன் என்று கூறி முடிந்தவரை கஞ்சாகருப்பு வாழ்வில் விளையாண்டார்.
அதன் பின் கருப்பு கருணாஸை நேரில் பார்த்து கதறி அழுத பின்தான் கருணாஸ் ஒதுங்கினார்.
யாரும் இனி வாய்ப்பு தர மாட்டார்கள் என்று முடிவான பின்பே அரசியலுக்கு வந்தார். இவரை நம்பி உடன் வந்த புலிப்படை இளைஞர்களுக்கு இவர் பத்துப் பைசா கூட செலவு செய்ததே இல்லை.
கூடுமானவரை அந்த அப்பாவி இளைஞர்களை மொட்டை அடித்தார். அதன் பின் ஜெ.,வின் துதி பாடியாக மாறி கொஞ்சம் காசு பார்த்தார்.
ஜெ.,மறைவிற்குப் பின் சசி பக்கம் மாறி அவருக்கு துதி பாடி காசு பார்த்தார். கூவத்தூரில் நான்கு நாட்கள் கூத்தடித்த கருணாஸ் இன்று மதியம் அங்கிருந்து சுவர் ஏறிக் குதித்து தப்பினார்.
நாளை முதல்வர் பன்னீரைப் பார்த்து அவரோடு ஐக்கியமாகப் போகிறார் என்கிற செய்தி வந்து சேர, துடித்துப் போனார்கள். பசும்பொன் அய்யாவின் தீவிர பக்தர்கள்.
பன்னிரிடம் “அண்ணே யாரை வேணும்னாலும் சேருங்க அந்த கருணாஸை மட்டும் சேர்க்காதீங்க என்று கேட்டு வருகின்றனர்.
காரணம் கருணாஸ் யாருக்குமே விசுவாசமாக இருக்க மாட்டார். என்கின்றனர் அந்த தேவரின பெருமக்கள். லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக