வியாழன், 16 பிப்ரவரி, 2017

தினகரனுக்கு கட்சி திவாகரனுக்கு ஆட்சி .. அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

தினகரனுக்கு கட்சி; 6 மாதத்தில் திவாகரன் கையில் ஆட்சி : இறுதியாக கார்டனில் சசிகலா வகுத்த திட்டம் அம்பலம் அ.தி.மு.க.,வை நிர்வகிக்கும் பொறுப்பு தினகரனுக்கும், அடுத்த ஆறு மாதத்தில் திவாகரனை முதல்வராக்கவும் திட்டம் வகுத்து கொடுத்து, சசிகலா போயஸ் கார்டனில் இருந்து சிறைக்கு கிளம்பியுள்ளார். ஜெ., மறைவுக்குப் பின், கட்சி, ஆட்சி, ஜெ., சொத்து என அனைத்தையும் வளைத்தது மன்னார்குடி கும்பல். சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த, 7 இரவு, ஓ.பி.எஸ்., தனியாக பிரிந்து, சசிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். இருப்பினும், அன்று இரவே, அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை கார்டனுக்கு வரவழைத்து, கூவத்துாரில் அடைத்தனர். தப்பிய, 10 எம்.எல்.ஏ.,க்கள் மட்டும், ஓ.பி.எஸ்., பக்கம் சென்றனர். யப்பா, இன்னமும், அம்மா, அம்மா ஆத்மா, அம்மா வழி , ஜெயலலிதா ஊழல் வாதி, குற்றவாளின்னு எத்தனையோ தடவை நீதி மன்றம் சொல்லிருச்சு. இன்னமும் ஜெயலலிதாவை பிடுச்சுக்கிட்டு தொங்குறீங்க. மொதல்ல MGR வழின்னேக. இப்ப அம்மா வழி, நாளைக்கு சின்னம்மா வழிம்பீங்க. அது என்ன வழின்னு தெரியுமா? அண்ணா வழி, MGR வழி மக்களை மாங்காய் மடையர்கள் ஆகும் வழி, இது கூட இப்போ அரசாங்க துட்டு அடிக்கிற வழியும், அடுத்தவன் சொத்தை ஆட்டைய போடும் வழி யும் சேந்துக்கிடுச்சு.  .மக்கள் இந்த ஊழல் அரசியல் வாதிகளை ஓவரா புகழறது, தலையில் தூக்கிக்கொண்டு ஆடுவது , விழுந்து கும்பிடுறது தான் தமிழ்நாட்டின் சீரழிவுக்கு முக்கிய காரணம். முட்டாள் தமிழா, திருந்து
 சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு பாதகமாக வந்தால் என்ன செய்வது என, கடந்த ஒரு வாரமாக பல திட்டங்களை வகுத்தனர். முதல்வர் பதவியில் சசிகலாவுக்கு பதில் தினகரன் அல்லது திவாகரனை அமர வைக்க ஆலோசித்தபோது, மக்களிடம் மேலும் எதிர்ப்பு வரும் என்பதால், எடப்பாடி பழனிச்சாமியையும் தேர்வு செய்தனர்.

நேற்று முன்தினம் வந்த தீர்ப்பில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதும், குடும்ப அளவில் சசிகலா, நடராஜன், தினகரன், திவாகரன் உள்ளிட்டோர் ஆலோசித்தனர். அதில், மக்களிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் பெரிய அளவில் புகார் இல்லாத மற்றும் அறிமுகமான தினகரனை, கட்சியின் துணைப் பொதுச் செயலராக ஆக்கி கட்சி பணியை கட்டுக்குள் வைப்பது என்றும் முடிவானது.

கூடவே, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் முதற்கட்டமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சியை அமைத்து, அரசின் பாதுகாப்புடன், திவாகரனை ஏதாவது ஒரு தொகுதி யில் போட்டியிட செய்து, அடுத்த, ஆறு மாதத்துக் குள் முதல்வராக்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

பொதுமக்கள், கட்சி, ஆட்சி என அனைத்து தரப்பினராலும் ஏற்கப்படாத சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, இந்த திட்டத்தில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. அவர் எந்த பொறுப்புக்கு வந்தாலும், அதை எவரும் ஏற்க மாட்டார்கள் என்பதை விளக்கி, கட்சி மற்றும் ஆட்சியில் நடராஜன் கூறும் பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும், ஒப்புதல்தெரிவிக்கப்பட்டது.

ஓ.பி.எஸ்., - எடப்பாடி பழனிச்சாமி போன்ற வெளி நபர்களை முதல்வராக்குவது, மதுசூதனன் போன்றவர்களை அவைத் தலைவராக்குவதால் எழும் சிக்கலை தவிர்க்க, மன்னார்குடி குடும்பத்தை சேர்ந்த ஒருவரை, இதுபோன்ற முக்கிய பதவிகளில் நியமிப்பது என்றும், தற்போதைய சிறை தண்டனை காலத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலாவே தொடர்வது என்றும் தீர்மானித்தனர்.

எந்த பதவியும் இல்லாமல், சிறையில் இருப்பது பாதுகாப்பு இல்லை என்றும், கூடுதல் வசதிகள் கூட கிடைக்காது என்றும் விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தான் முதல் கட்டமாக, ஜெயலலிதாவால் அடித்து விரட்டப்பட்ட தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் கட்சியில் சேர்க்கப்பட்டனர். அடுத்த சில மணி நேரத்தில் தினகரன், கட்சியின் துணை பொதுச் செயலராக அறிவிக்கப்பட்டார். ஆலோசனையின் போது கூறப்பட்ட முடிவுகளை, திட்டமாக வகுத்து கொடுத்து விட்டு தான், சசிகலா பெங்களூரு சிறைக்கு புறப்பட்டார்.

அன்னிய செலாவணி வழக்கில் தண்டிக்கப்பட்ட தினகரன்

இந்திய ரூபாய் மதிப்பில், 36 கோடி ரூபாயை, அமெரிக்க டாலராக, 1.04 கோடியை அங்கீகாரம் இல்லாத ஏஜன்ட் மூலம் பெற்று, இங்கிலாந்தில் உள்ள, 'பார்க்லேஸ்' வங்கியில் தினகரன் டிபாசிட் செய்துள்ளார்.

அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டப்படி, 1996ல் தினகரன் மீது வழக்கு பதிவாகி, 1998ல் அவருக்கு, 31 கோடி ரூபாய் அபராதம்விதிக்கப் பட்டது.இதை எதிர்த்து, டில்லி அன்னிய செலாவணி ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியத்தில் முறையீடு செய்து, 28 கோடி ரூபாயாக அபராத குறைப்பு பெற்றார்.

இத்தொகையை, 45 நாளில் கட்ட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், இதை மேல்முறையீடு செய்தார். உயர்நீதிமன்றம் இந்த அபராத தொகையை றுதி செய்துள்ளது. இதையும் மேல்முறை யீடு செய்யும் முயற்சியில் தினகரன் உள்ளார்.>பரம எதிரிகளான தினகரன் - திவாகரன்

சசிகலாவின் தம்பியான திவாகரனும், சசிகலா வின் அக்கா வனிதாமணியின் மூத்த மகனான தினகரனும், ஜெ.,யின் நம்பிக்கையை பெற்ற வர்கள். மிகவும் முரட்டு குணம் கொண்ட திவாகரன், 1998 முதல் கார்டனுக்குள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டார். ஆனால், கட்சியினருடன் இணக்கமாக செயல் படுவதால், தினகரனை, 1999ல் பெரியகுளம் லோக்சபா தொகுதியில், ஜெ., நிறுத்தி வெற்றி பெற செய்தார். 2004ல் அதே தொகுதியில் தினகரன் தோல்வியடைந்தாலும், ராஜ்யசபா, எம்.பி., பதவி கொடுக்கப்பட்டு, டில்லி அரசியலை தினகரன் கவனித்தார்.

ஆனால், 2006 முதல் தினகரனும் கார்டனுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு, 2011ல் சசிகலா கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, தினகரனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, முற்றிலும் வெளியேற்றப்பட்டார். இருப்பினும், இவரது மனைவி அனு, ஜெயா, 'டிவி' இயக்குன ராக கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறார்.

ஆரம்ப காலம் முதல், தினகரன் மற்றும் திவாகரனுக்கு இடையே எப்போதும் ஏழாம் பொருத்தமாக தான் இருக்கும். சிறிய விஷயத் துக்கு கூட அடிக்கடி மோதிக்கொள்வது வழக் கம். தினகரனுக்கு, எம்.பி., பதவி கொடுத்தது முதல், அத்தனை செயல்பாட்டிலும் சசிகலா விடம், திவாகரன் எதிர்த்து வந்தார்.

இந்நிலையில், கட்சியை தினகரனிடமும், ஆட்சியை திவாகரனிடமும் வழங்க சசிகலா திட்டமிட்டுள்ளதால், அவர்களே மோதி உடைவர் என கட்சியினர் கூறுகின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்

கருத்துகள் இல்லை: