சென்னை: தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பணம் திருடியதாக விசாரிக்கப்பட்ட அவரது கார் டிரைவரின் தந்தை நேற்று திடீரென மரணடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக இரண்டாக பிளவுபட்ட நிலையில் சசிகலா அணியின் முதல்வராக முன்னிறுத்தப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.
எடப்பாடி வீட்டில் திருட்டு
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் கார் டிரைவரின் தந்தை சொக்கலிங்கம் விஷம் குடித்து திடீரென இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் ரூ94 லட்சம் திருட்டு போயுள்ளது.
டிரைவரின் தந்தையிடம் விசாரணை
டிரைவரின் தந்தையிடம் விசாரணை
இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியின் கார் டிரைவரான செந்திலின் தந்தை தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கோவில்பத்து பகுதியை சேர்ந்த சொக்கலிங்கத்தை போலீசார் விசாரித்துள்ளனர். போலீசார் விடிய விடிய சொக்கலிங்கத்திடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த விசாரணை முடிவடைந்த நிலையில் சொக்கலிங்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்கள் மீது முறைகேடு புகார்கள் உள்ளன.
அதேபோல தலித் சமூகத்தைச் சேர்ந்த போலீசார் ஒருவரை கொடூரமாக எடப்பாடி பழனிச்சாமியே தாக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் கார் டிரைவரின் தந்தையின் திடீர் மரணமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. tamiloneindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக