புதன், 15 பிப்ரவரி, 2017

இரண்டே மாதத்தில் வருவேன்: எம்.எல்.ஏ.க்களிடம் சசிகலா பேச்சு!

அ.தி.மு.க. பொதுச் செயலாளரான சசிகலா செவ்வாய்க்கிழமை (14. 2. 17) இரவு 8.45க்கு கூவத்தூர் முகாமை விட்டு கிளம்பியுள்ளார். அப்போது அவர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் மனம் விட்டு பேசியதை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு சீனியர் எம்.எல்.ஏ. நம்மிடம் அப்படியே கூறினார். "நான் இப்போது உங்களை விட்டு போகிறேன். எனக்கு நான்கு வருடம் சிறை என தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் அது நடக்காது. எனக்கு எல்லா வழிகளையும் அம்மா அதாவது நான் அக்கா குட்டிம்மா என அழைக்கும் எனது தோழி அம்மா ஜெயலலிதா ஏற்படுத்தி கொடுத்துள்ளார். நான் எனது உடல் தான் சிறைக்குள் இருக்கும் உயர் எல்லாம் இங்கு தான் இருக்கும், எனக்கு நாளை வரை நேரம் உள்ளது. இப்போது போயஸ் கார்டன் தான் செல்கிறேன். அங்கு தங்கிவிட்டு அடுத்த நாள் தான் பெங்களூரு செல்வேன். போயஸ் கார்டனையும் அம்மாவின் சொத்துக்களையும் காப்பாற்ற வேண்டும். எனது முழுமையான விசுவாசி எடப்பாடி பழனிச்சாமி. அவர் உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்வார். நான் எண்ணி இரண்டே மாதங்களில் இங்கு வந்து விடுவேன் நீங்கள் கேட்டதும் கேட்காததும் நிறைவேறும்" என்றார் -ஜீவா தங்கவேல்.  நக்கீரன்

கருத்துகள் இல்லை: