புதன், 15 பிப்ரவரி, 2017

சசிகலா, இளவரசி, சுதாகரன் இன்று மதியத்துக்குள் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜாராவர்!

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, அவரது உறவினர்களுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 கோடி அபராதம் விதித்து பெங்களூர் தனிநீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பினை உச்சநீதிமன்றம் உறுதி செய்து நேற்று உத்தரவிட்டது. மேலும், உடனடியாக பெங்களூர் தனிநீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் இன்று மதியத்துக்குள் பெங்களூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அதிமுக கொள்கை பரப்புச்செயலாளரும் துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று பெங்களூர் வருகிறார். சசிகலா கோர்ட்டில் ஆஜராவதற்கான முன்னேற்பாட்டுப்
பணிகளை தம்பிதுரை கவனிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. லைவ்டே

இப்படிப்பட்ட பச்சோந்திகள கூட வச்சுகிட்டு தான் முதலமைச்சர் ஆகணும்னு ஆசைப்பட்டியா பவுடர் பங்கஜம்..?

கருத்துகள் இல்லை: