சனி, 18 பிப்ரவரி, 2017

Assembly postponed ..சபாயாகர் ஓட்டம் .. மைக்குகள் உடைக்கப்பட்டன .. நாற்காலிகள் வீசப்பட்டன

சட்டப் பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்கட்சியின் அமளியால் அவை 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. சட்டபேரவையில் அமளியால் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு மைக் உடைக்கப்பட்டு, இருக்கை சேதப்படுத்தப்பட்டது. இதனால், சபாநாயகர் சட்டபேரவையில் இருந்து வெளியேறினார். காவல்துறையினர், சபாநாயகரை பாதுகாப்பாக அறைக்கு அழைத்து சென்றனர். மேலும், சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் சேதப்படுத்தப்பட்டது. இதனால் அவரும் பேரவையில் இருந்து வெளியேறினார். உறுப்பினர்களின் ரகளையால், சட்டபேரவை பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ISROவை மிஞ்சியது தமிழக சட்டசபை, ஒரே நேரத்தில் 105 நாற்காளிகள் வின்னில் ஏவப்பட்டன
வேண்டும்... வேண்டும்... ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என ஓபிஎஸ் அணி, எதிர்க்கட்சியினர் சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷம் .... # பழக்க தோஷத்தில் ..வேண்டும்... வேண்டும்... ஜல்லிக்கட்டு வேண்டும்னு சொல்லிடாதிங்க....

கருத்துகள் இல்லை: