புதன், 15 பிப்ரவரி, 2017

அனைத்து திமுக எம்எல்ஏக்களுக்கும் அவசர அழைப்பு ! அண்ணா அறிவாலயத்தில் ...பல வித ஊகங்கள்?

அவசர அவசரமாக சென்னை திரும்புகிறார் மு.க.ஸ்டாலின் .
 இன்று மாலை சென்னை வருமாறு அனைத்து திமுக எம்எல்ஏக்களும் திமுக மேலிடத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிது. கோவைக்கு சென்றிருந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்காக சென்னை திரும்புகிறார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனையால் தற்போது காபந்து முதல்வராக பன்னீர்செல்வம் நீடிக்கிறார். அதிமுக உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி தன்னை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர் என்று ஆளுநரிடம் கடதம் கொடுத்துள்ளார். ஆளுநரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. திடீரென நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால், திமுக எடுக்க வேண்டிய நிலைபாடு குறித்து ஆலோசிக்க இந்த அவசர கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது நக்கீரன்
119 MLA க்கள் ஆதரவு உள்ள, எடப்பாடி பழனியை ஆட்சி அமைக்க கவர்னருக்கு உறுத்தல் இருக்குமானால், அடுத்து 89 MLA க்கள் +(9காங்கிரஸ்) ஆதரவுள்ள திமுகவை அழைப்பது தான் முறை.... 9 MLA க்கள் மட்டுமே ஆதரவுள்ள,பாஜகவின் பினாமி அணி என்று சொல்லப்படும் OPS அணியை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பாரேயானால், அது ஜனநாயக படுகொலை...
பிந்திய செய்தி : சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் உத்தரவிடும்பட்சத்தில் தி.மு.க எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து எம்.எல்.ஏக்களிடம் கேட்க முடிவு செய்துள்ளது திமுக.

கருத்துகள் இல்லை: