சனி, 18 பிப்ரவரி, 2017

கூவத்தூர் விடுதி உளவுத்துறை வாச்சிங் ! குதிரை பேரம் ரிகார்டிங் ! எம் எல் ஏ வீடுகளுக்கு ரெயிட் ஆயத்தம்?

saravana.kumaran.Ops அணி மிக தெளிவாய் காய் நகர்த்தி கொண்டிருக்கிறது. 5 நாட்கள் எடுத்த கூவந்துர் MLA மீட்பு போராட்டம் தோல்வி அடைந்ததாக நாம் கருதிக்கொண்டிருக்கிறோம் ஆனால் அது உண்மை அல்ல எதிரியை ஒரு வட்டத்தில் அடைத்து அவர்களின் குதிரை பேரம் குறிக்கப்பட்ட நிலையில் கண்காணிக்க படுகிறது. ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம் நன்றாக கவனியுங்கள் 3 தினத்திற்கு முன் ஒரு ஆம்புலன்ஸ் சென்றது நினைவு உங்களுக்கு இருக்கலாம். அதில் என்ன போனது என்பது முதல் அணைத்து வாகன பரிவர்த்தனைகளும் கவனமாக மத்திய அமலாக்க துறை மற்றும் உளவு படை கண்காணிப்பில் வந்து 5 தினங்கள் ஆகிவிட்டது. இவர்கள் செய்யும் வேலைகள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்டு விட்டது. பதிவு செய்த தகவல்கள் அனைத்தும் வெளிய எடுக்க போலீஸார் அணிவகுப்புமூலம் MLA களை கவனத்தை திருப்பி வெளிக்கொணரப்பட்ட பின் தான் ஆளுநர் எடப்பாடிக்கு அழைப்புவிடுத்தார் நாளை நம்பிக்கை வாக்கு நடக்கவிருக்கும் நிலையில் எடப்பாடி ஜெயித்தால் கூட அந்த அணிக்கு பின்விளைவுகள் மிக மிக மோசமாக இருக்க போகிறது .அது எப்படி தெரியுமா இவர்கள் பணபரிவர்த்தனைகள் எல்லாம் உற்பத்தி இடம் முதல்கொண்டு தெரிய வரும்வகையில் வலைவிசப்பட்டுவிட்டது. MLA களின் சந்தோசம் 3 நாட்கள்கூட நிற்கப்போவது இல்லை. சிபிஐ அமலகபிரிவு வருமனவரித்துறை IT ஆகியவை இந்த ஒப்பேரஷனில் கூட்டாக களம் இறங்கி விட்டதை பிரதமர் நேரடியாக கவனித்து வரும் நிலையில் சிக்க போவது MLA கள் மட்டும் அல்ல அவர்கள்சேர்த்து வைத்த அனைத்தையும் பறிக்க போவது உறுதி.


 அதிமுகவின் கட்சி சட்ட வழிமுறைகளை (பைலா) திருத்தும் அதிகாரம் அந்த கட்சியின் பொதுச்செயலாளருக்கு மட்டும்தான் உண்டு.
அதாவது 'வீட்டோ பவர்'.


ஆனால் அதிமுக பொதுச்செயலாளராக ஒருவரை தேர்ந்தெடுக்க கட்சியின் பைலாவை திருத்தும் அதிகாரம் யாருக்கும் இல்லை. கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவிற்கும்கூட இல்லை.

அதிமுகவில் யாராவது பதவிக்கு வர வேண்டுமென்றால் அவர் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் அக்கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். சசிகலா 2012 ல் கட்சியின் அடிப்படை உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்ட பிறகும் முழுமையாக 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யவில்லை. அதாவது 2017 ஏப்ரல் மாதம்வரை சசிகலாவே நினைத்தாலும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியாது. தகுதியிழப்பு செய்யப்படுவார்.

அதனால் உட்கட்சி தேர்தல் அறிவித்து சசிகலாவை தேர்ந்தெடுக்க முடியாது என்பதால் பொதுக்குழு & செயற்குழு கூடி சசிகலாவை பொதுச்செயலாளராக நியமனம் செய்வதாக அறிவித்தார்கள்.

நியமன பொதுச்செயலாளர் என ஒன்று அதிமுகவில் கிடையாது. இதைதான் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு போயிருக்கிறார்கள்.

கடந்த டிசம்பர் மாதம் கூட்டப்பட்ட அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அவைத்தலைவரால் கூட்டப்படவில்லை. அதில் எந்த ஆவணத்திலும் அவைத்தலைவர் மதுசூதனனின் கையெழுத்து இல்லை.

அவைத்தலைவர் மட்டும்தான் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்ட அழைப்பு விடுக்க வேண்டும். அது முறைப்படி நிகழாததால் கடந்த டிசம்பர் மாதம் கூட்டப்பட்ட அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமே செல்லாது. செல்லாத செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவின் நியமனமும் செல்லாது .

இதைத்தான் அதிமுகவின் 12 எம்.பிக்கள் டாக்டர் மைத்ரேயன் தலைமையில் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு போயிருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து இதற்கு விளக்கம் கேட்டு பரப்பன அக்ரகார சிறையிலிருக்கும் சசிகலாவிற்கு நேரடியாக நோட்டிஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம்.

மொத்தத்தில் சசிகலா ஒரு செல்லாத நோட்டு!  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: