காஷ்மீரில்
உள்ள ‘உரி’ இந்திய ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு
ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கிமூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோரத்தில் உள்ள இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான
அகன்று பரந்த ராணுவ முகாமான உரியில் நேற்று அதிகாலை நான்கு மணிக்கு
பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில் 20 இந்திய ராணுவத்தினர்
கொல்லப்பட்டார்கள். நான்கு பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்
கொன்றார்கள். இந்தியா முழுக்க இத்தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்திய
நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளார் பான்கிமூன் இத்தாக்குதலுக்கு கடும்
கண்டனம் தெரிவித்துள்ளார். மின்னம்பலம்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக