சுவாதி
கொலைவழக்கில் கைதாகி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார்,
இன்று சிறையில் உள்ள மின் கம்பியை பிடித்து கடித்து தற்கொலைக்கு
முயன்றதாகவும், அவரது தற்கொலை முயற்சியை சிறை அதிகாரிகள் தடுத்தி நிறுத்தி
ராம்குமாரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், ஆனால்,
மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டதாகவும் போலீஸ் தகவல்.மரணம் அடைந்த ராம்குமார் உடல் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.>கடந்த
ஜூன் மாதம் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் வெட்டிக்
கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், ஜூலை
1ம் தேதி கைதாகும்போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் என்று போலீஸ்
தரப்பில் கூறப்பட்டது. சென்னை கொண்டு வரப்பட்டு ராயப்பேட்டை
மருத்துவமனயில் சிகிச்சை அளிக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி புழல்
மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்புழல்
சிறையில் தனி அறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிர கண்காணிப்பு
பிரிவில் அடைக்கப்பட்டிருந்தார்.
12 மணி நேரத்திற்கு ஒருமுறை இரண்டு காவலர்கள் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று ராம்குமார் அவரது அறையில் இருந்த மின்கம்பியை கடித்து இறந்துவிட்டதாக புழல் சிறை நிர்வாகம் தெரிவிக்கிறது. இத்தனை பாத்காப்புகள் இருந்தும் எப்படி இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கும் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. கண்காணிப்பு குறைபாடு காரணம் ஆக இருக்கலாமா என்றும் கூறப்படுகிறது. ராம்குமார் மரணத்தில் பல மர்மங்கள் நிறைந்திருப்பதாக சிறையில் உள்ள கைதிகள் சிலர் வழக்கறிஞர்கள் மூலம் தகவல்களை தெரிவித்துள்ளனர்.
;இன்று காலை 6 மணியில் இருந்தே தனது அறையில் இருந்து ராம்குமார் வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் யாரோ சிலர் ராம்குமாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல அவரது அறையில் இருந்து எந்தவிதமான அலறல் சத்தமும் வெளிவரவிலை. இதனால் சக கைதிகள் இடையே பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.
மின் கம்பியை கடித்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமார் காப்பாற்றப்பட்டபோது, சிறை மருத்துவர்கள் ராம்குமாருக்கு நாடித்துடிப்பு இருப்பதை அறிந்தனர். இதையடுத்தே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், திடீர் என இறந்துவிட்டதாக சொல்லபடுவதும் சந்தேகத்தை எழுப்புகின்றன.
;ராம்குமாரின் மர்ம மரணம் குறித்து பல மர்ம முடிச்சுகளை புழல் சிறை மூடி மறைப்பதாக வழக்கறிஞர்கள் சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர்.<- span="">->

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக