கோவை இந்து முன்னணி அமைப்பின் செய்தி தொடர்பாளர் சசிகுமார், தமது பணிகளை
முடிந்து வியாழக்கிழமை நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கோவை
சுப்பிரமணியம் பாளையம், சர்க்கரை விநாயகர் கோயில் அருகே வந்தபோது, மர்ம
நபர்கள் சிலர், வழிமறித்து ஆயுதங்களால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்து
உயிருக்கு போராடிய சசிகுமாரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு
சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சசிகுமார் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த இந்து முன்னணியினர் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனை கண்ணாடிகள் உடைந்தன. பேருந்துகள் மீதும் தாக்குதல் நடத்தினர். கலவர சூழல் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டபோதும், பூட்டை உடைத்து கடைகளில் இருந்த பொருட்களை சூறையாடினர். போலீஸார் இருந்தும் இந்து முன்னணியினரின் செயல்களைக் கண்டுகொள்ளவில்லை. அதோடு, மசூதிகளின் மீதும் இஸ்லாமியர்களின் கடைகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கொலைக்கான பின்னணி
சசிகுமார் வேறு சமூகத்து பெண்ணை திருமணம் செய்துகொண்டதாகவும் அதனால் அவர் பெண்ணின் சமூகத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கொலையை திசை திருப்பி, தனது அரசியல் ஆதாயத்துக்காக இந்து முன்னணி, பாஜக போன்ற இந்துத்துவ கட்சிகள் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. thetimestamil.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக