அதிரடி ஸ்டேட்மெண்ட் மன்னன் சுப்பிரமணியன் சுவாமி
காவிரி நதி நீர் பங்கீடு பற்றி கருத்துக் கூறியுள்ளார். தனது ட்விட்டர்
பக்கத்தில் இதுபற்றி கருத்து வெளியிட்ட சுவாமி. ‘தமிழகம் காவிரி நீர்
கேட்டு புலம்புவதை விட்டு விட்டு, கடல் நீரை சுத்திகரிப்பு செய்து அதனை
குடிப்பதற்கும், விவசாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று
கூறியுள்ளார். ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில் சென்னை வந்தவர் மீனம்பாக்கம்
விமான நிலையத்தில் காவிரி பற்றி கருத்து உதிர்த்தபோது, ‘காவிரி பிரச்னையில்
கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது
தற்காலிகமானதுதான். இது மறுபடியும் பிரச்னைகளையே உருவாக்கும். நதி நீர்
இல்லாத சவூதி அரேபிய போன்ற நாடுகளில் கடல் நீரைப் பயன்படுத்தி அந்நாடு
மக்களின் தண்ணீர் தேவையை 24 மணி நேரமும் பூர்த்தி செய்து வருகிறது. அதுபோல
தமிழகத்தின் நீர் பற்றாக்குறையை சரி செய்யவும் தமிழக விவசாயிகளின்
தேவைக்கும் கடல் நீரை சுத்திகரித்து வழங்க வேண்டும். இது ஒன்றுதான் சிறந்த
வழி என்று ஜெயலலிதாவுக்கும் தெரியும். ஆனால், அவர் தண்ணீர் தயாரிக்கும்
நிறுவனங்களுடன் டீல் வைத்துள்ளார். எனவேதான், கலவரத்தைத் தூண்டிவிட்டு,
அவர் அரசியல் செய்து டிராமா போடுகிறார்’ என்றும் கூறியுள்ளார். மின்னம்பலம்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக