மின்னம்பலம்.காம் : சுவாதி
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், கடந்த ஞாயிற்றுக்கிழமை
திடீரென மரணமடைந்தார். அவர் மின் வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டார்
என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராம்குமாரின் உடல்கூறாய்வுக்காக,
சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது.
ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறுவது நம்பும்படியாக இல்லை. எனவே, உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராம்குமாரின் உடலைப் பார்வையிடுவதற்காக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்தார். ஆனால் ராம்குமாரின் உடலைப் பார்ப்பதற்கு காவல்துறையினர் மறுப்புத் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ராம்குமார் கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது. ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்று போலீசார் கூறுவது நம்பும்படியாக இல்லை. போலீசார் செய்யும் என்கவுன்ட்டர்களைப்போல் ராம்குமார் மின் கவுன்ட்டர் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது என்று சீமான் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக